டெல்லியில் போராடும் விவசாயிகளின் பயத்தை மத்திய அரசு போக்க வேண்டும்: நிதிஷ்குமார்!!

1 December 2020, 8:28 am
nithish kumar - updatenews360
Quick Share

பாட்னா: டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளின் பயத்தை மத்திய அரசு போக்க வேண்டும் என்று நிதிஷ்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பாட்னாவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில்,

விவசாய விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலை ரத்து செய்யப்படும் என நினைத்து டெல்லியில் போராடும் விவசாயிகளின் அச்சத்தை மத்திய அரசு போக்க வேண்டும். போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

Farmers_Delhi_Protest_UpdateNews360

அவர்கள் பேசும்போது, குறைந்தபட்ச ஆதாரவிலை குறித்த தங்களின் பயம் தேவையற்றது என்று விவசாயிகள் புரிந்துகொள்வர். பீகாரில் கடந்த 2006ம் ஆண்டிலேயே மண்டி முறையை ஒழித்து, தொடக்க விவசாய கடன் சங்கங்கள் மூலம் விவசாய பொருட்களை கொள்முதல் செய்யும் முறையை கொண்டுவந்து விட்டோம்.

அதன்பிறகு பீகாரில் விவசாய கொள்முதல் அதிகரித்தே இருக்கிறது. குறைந்தபட்ச ஆதாரவிலை நீக்கப்படாது என்றும், கொள்முதல் எந்தவகையிலும் பாதிக்கப்படாது என்றும் விவசாயிகளிடம் மத்திய அரசு விளக்கும் என நான் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Views: - 0

0

0