“முஸ்லீம்களை வெளியேற்றும் தைரியம் யாருக்கும் இல்லை”..! சிஏஏ குறித்து நிதீஷ் குமார் பரபரப்பு..!

5 November 2020, 1:45 pm
Nitish_Kumar_CAA_UpdateNews360
Quick Share

பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் முஸ்லீம்கள் ஆதிக்கம் நிறைந்த சீமாஞ்சல் பிராந்தியத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, 2019 டிசம்பரில் நாடு தழுவிய போராட்டத்தைத் தூண்டிய குடியுரிமை திருத்த சட்டம் குறித்த அச்சங்களை நிவர்த்தி செய்தார்.

யாரையும் நாட்டிலிருந்து வெளியே அனுப்ப இங்கு யாருக்கும் பலம் இல்லை என்று நிதீஷ் கூறினார் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்ற வதந்திகளை முறியடிக்கும் விதமாகக் கூறினார்.

பீகாரின் வடகிழக்கு பிராந்தியமானது சிஏஏ’வுக்கு எதிராக பல மாதங்களாக பரவலான எதிர்ப்புக்களைக் கண்டது குறிப்பிடத்தக்கது.

பிராந்தியத்தில் அன்பு, அமைதி மற்றும் சகோதரத்துவத்தை பரப்புவதற்கு தனது அரசாங்கம் செயல்பட்டதாகவும், மதரஸாக்களில் ஆசிரியர்களுக்கான சம்பளத்தை அதிகரித்திருப்பதை நினைவுபடுத்த விரும்புவதாகவும் முதல்வர் கூறினார்.

“இதுபோன்ற குப்பைப் பேச்சு மூலம் தவறான தகவல்களைப் பரப்புகிறார்கள். எந்தவொரு குடிமகனையும் நாட்டிலிருந்து வெளியேற்றும் தைரியம் யாருக்கும் இல்லை” என்று அவர் மேலும் கூறினார்.

முஸ்லீம்கள் ஆதிக்கம் செலுத்தும் கிஷன்கஞ்ச் மற்றும் அராரியா மாவட்டங்களில் தேர்தல் பேரணிகளில் உரையாற்றியபோது அவர் இந்த கருத்துக்களைத் தெரிவித்தார். நவம்பர் 7’ம் தேதி இரு மாவட்டங்களும் மூன்றாவது மற்றும் இறுதி கட்டத்தில் தேர்தலில் வாக்குப் பதிவை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் எந்த ஒரு நபர்கள் மற்றும் கட்சிகளின் பெயரையும் குறிப்பிடாமல், சிலர் சாதிகளுக்கும் மதக் குழுக்களுக்கும் இடையில் சண்டையை ஊக்குவிக்க விரும்புகிறார்கள் என்று கூறினார். அவரது இந்த குற்றச்சாட்டு ஏஐஎம்ஐஎம் மற்றும் வேறு சில எதிர்க்கட்சிகளை நோக்கியதாக தெரிகிறது.

நிதீஷ் குமார் தனது அரசாங்கம் சமூகத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் எப்போதும் பணியாற்றி வருவதாகவும், மாநிலத்தில் வகுப்புவாத நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதாகவும் கூறினார். பிரதான எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளத்தையும் அவர் தொடர்ந்து தாக்கினார். 

பீகாரில் ஏற்கனவே இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்த நிலையில், வரும் நவம்பர் 7’ஆம் தேதி மூன்றாம் மற்றும் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. மேலும் அனைத்து தொகுதிகளிலும் நவம்பர் 10’ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.

Views: - 17

0

0