பீகாரில் மீண்டும் நிதீஷ் குமார் தலைமையில் தான் ஆட்சி..! யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த பாஜக தலைவர்..!

11 November 2020, 1:26 pm
Sanjay_Jaiswal_BJP_UpdateNews360
Quick Share

பீகார் முதலமைச்சராக நிதீஷ் குமார் இருப்பார் என்று மாநில பாஜக தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் இன்று தெரிவித்தார். கூட்டணியில் அதிக இடங்களைக் கைப்பற்றியதன் காரணமாக முதல்வர் பதவியை பாஜக கேட்கும் என்ற ஊகங்களுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. 

பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக 74 இடங்களையும், ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களையும் இதர கூட்டணி கட்சிகளான எச்.ஏ.எம் மற்றும் விகாஷீல் இன்சான் கட்சிகள் தலா 4 இடங்களையும் பெற்றுள்ளது. இதன் மூலம் எதிர்க்கட்சி மெகா கூட்டணி வென்ற 110’க்கு எதிராக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் எண்ணிக்கை 125’ஆக உயர்ந்தது.

“எங்கள் கட்சித் தலைவரும், பிரதமருமான நரேந்திர மோடி, நிதீஷ் குமார் முதலமைச்சராக இருப்பார் என்று நீண்ட காலத்திற்கு முன்பே அறிவித்திருந்தார். அவர்களே அவரைப் பெயரிட்டபோது, ​​வேறு எந்தப் பெயர் குறித்து எந்த கேள்வியும் இருக்கக்கூடாது.” என்று சஞ்சய் ஜெய்ஸ்வால் கூறினார்.

ஜங்கிள் ராஜ் எனும் காட்டாட்சியாக பரவலாக விமர்சிக்கப்பட்ட 2005’க்கு முந்தைய 15 ஆண்டுகளின் லாலு-ராப்ரி அரசாங்கத்தை அகற்றிய பெருமைக்குரியவர் நிதீஷ் . உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு முறை மற்றும் கல்வியை மேம்படுத்துவதற்கான அவரது உந்துதலுக்காகவும் அவர் பாராட்டுகளைப் பெற்றார்.

இந்த நேரத்தில் மோடியின் நீடித்த கவர்ச்சி தான் கூட்டணியின் வெற்றியை ஊக்குவித்தது மட்டுமல்லாமல், முதல் முறையாக பீகாரில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முதலிடம் வகிக்க பாஜகவுக்கு உதவியது எனப் பேசப்படுகிறது.

இதற்கிடையில், சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி ஒரு இடத்தை மட்டுமே வென்றது. ஆனால் குறைந்தபட்சம் 30 இடங்களில் ஐக்கிய ஜனதா தளத்தின் வெற்றியை தடுத்தது. இருப்பினும், எண்ணிக்கையில் சரிவு இருந்தபோதிலும், தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிதீஷ் குமார், அரசாங்கத்தின் ஆட்சியைக் கைப்பற்ற உள்ளார்.

Views: - 20

0

0

1 thought on “பீகாரில் மீண்டும் நிதீஷ் குமார் தலைமையில் தான் ஆட்சி..! யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த பாஜக தலைவர்..!

Comments are closed.