நோ அட்டென்டன்ஸ்..! நோ பிரேயர்..! 10 மற்றும் 12’ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கல்வி இயக்குநரகம்..!

18 January 2021, 10:57 am
Delhi_Schools_UpdateNews360
Quick Share

தொற்றுநோயால் 10 மாதங்கள் மூடப்பட்ட நிலையில் டெல்லியில் உள்ள பள்ளிகள் இன்று முதல் மீண்டும் செயல்பட ஆரம்பித்துள்ளது. முன்னதாக மாணவர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தவும் டெல்லியில் உள்ள பள்ளிகள் மார்ச் 19 முதல் மூடப்பட்டன.

டெல்லி அரசாங்கத்தின் உத்தரவின்படி, கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ள அனைத்து பள்ளிகளும் இன்று முதல் 10 மற்றும் 12’ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் மீண்டும் திறக்கப்படுகிறது. கட்டுப்பாட்டு மண்டலங்களுக்குள் உள்ள பள்ளிகள் செயல்பட அனுமதிக்கப்படாது. 

கட்டுப்பாட்டு மண்டலத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். அனைத்து கொரோனா வழிகாட்டுதல்களையும் பின்பற்றுமாறு பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

போர்டு தேர்வுகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது. கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, மாணவர்களின் வருகை கட்டாயமாக இருக்காது. பெற்றோரின் ஒப்புதலுடன் மட்டுமே மாணவர்கள் பள்ளிகளுக்கு வர முடியும்.

இதே போல் பள்ளி வளாகத்தில் கொரோனா அறிகுறி உள்ள மாணவர் அல்லது பணியாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் மற்றும் நுழைவாயிலில் கட்டாயமாக தெர்மல் ஸ்கேனிங் நடத்தப்படும். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும்.

மாணவர்கள் பள்ளிக்கு வருவது குறித்த பதிவு பராமரிக்கப்படும். ஆனால் அது வருகை நோக்கத்திற்காக இருக்காது. வகுப்புகளில் கலந்துகொள்வது தன்னார்வமானது. மேலும் பள்ளிகளில் பிரேயர் போன்ற வெளிப்புற நடவடிக்கைகள் இருக்காது.

வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து தேவைப்பட்டால் இரண்டு ஷிப்டுகள் இருக்கும். வீட்டில் இருந்து படிக்க நினைப்பவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடரும். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை அழைத்துச் செல்ல பள்ளிகள் போக்குவரத்து வசதிகளை வழங்காது.

இதற்கிடையில், ராஜஸ்தானில் உள்ள பள்ளிகள் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றி இன்று மீண்டும் திறக்கப்படுகிறது. கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களையும் இறுதி ஆண்டு மற்றும் இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு மீண்டும் தொடங்க மாநில அரசு அனுமதித்துள்ளது.

அரசாங்கத்தின் உத்தரவின்படி, 9 முதல் 12 வகுப்புகளுக்கான பள்ளிகள் ஒவ்வொரு வகுப்பறையிலும் 50 சதவீத இருக்கை வசதியுடன் மீண்டும் தொடங்கலாம். இருப்பினும், மாணவர்கள் வகுப்புகளில் கலந்துகொள்ள பெற்றோரின் ஒப்புதல் தேவைப்படும்.

இதே போல் தமிழகத்திலும் நாளை முதல் 10 மற்றும் 12’ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் வகுப்புகள் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0