சுஷாந்த் சிங் வழக்கு..! ஊடக அறிக்கைகள் பொய்..? விளக்கம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட சிபிஐ..!
4 September 2020, 4:31 pmநடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் தொடர்பாக மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) விசாரணைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. ஆனால் ஊடக அறிக்கைகள் உண்மைகளை அடிப்படையாகக் கொண்டவை அல்ல என்று சிபிஐ விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிபிஐ விசாரணை வளையத்தில் மும்பை காவல்துறை உள்ளதாகவும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ரியா சக்ரவர்த்தி உள்ளிட்ட சிலரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை விபரங்கள் கசிந்ததாக சில தினங்களுக்கு முன்பு பராபரப்பு உருவாகியது.
இந்த விவகாரத்தில், உண்மைக்கு மாறாக, சில ஊடகங்கள், குறிப்பிட்ட சிலரைக் கைது செய்ய உள்ளதாக புனைகதைகளை வெளியிட்டதாக, சிபிஐக்கு புகார் வந்ததை அடுத்து, இந்த விளக்கத்தை சிபிஐ கொடுத்துள்ளது.
கொள்கை ரீதியாக, நடந்துகொண்டிருக்கும் விசாரணையின் விவரங்களை சிபிஐ ஊடகங்களுடன் பகிர்ந்து கொள்ளாது என்று சிபிஐ கூறியதுடன், எந்தவொரு குழு உறுப்பினரும் அல்லது செய்தித் தொடர்பாளரும் அதன் விசாரணையின் விவரங்களை ஊடகங்களுடன் பகிர்ந்து கொண்டதாக வெளியான செய்திகளையும் மறுத்துள்ளது.
“சிபிஐக்கு புகாரளிக்கப்பட்ட மற்றும் கூறப்பட்ட விவரங்கள் நம்பத்தகுந்தவை அல்ல. சிபிஐ மேற்கோள் காட்டுவதற்கு முன்பு சிபிஐ செய்தித் தொடர்பாளரிடமிருந்து விவரங்களை ஊடகங்கள் உறுதிப்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது” என்று சிபிஐ நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முன்னதாக, பல ஊடகங்கள் குற்றம் சாட்டப்பட்ட சிலரை சிபிஐ கைது செய்யலாம் என்று கூறி கதைகளை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.
0
0