டிசம்பர் 31 வரை சர்வதேச பயணிகள் விமான சேவை ரத்து..! மத்திய அரசு உத்தரவு..!

26 November 2020, 1:05 pm
Flight_UpdateNews360
Quick Share

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில், வழக்கமான சர்வதேச பயணிகள் விமான சேவையை நிறுத்தி வைப்பதை டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசின் கீழ் செயல்படும் சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (டி.ஜி.சி.ஏ.) இன்று தெரிவித்துள்ளது.

எனினும், குறிப்பிட்ட சில நாடுகளுடன் மேற்கொண்டுள்ள காற்று குமிழி ஒப்பந்தங்கள் மூலம் மக்கள் பயணம் மேற்கொள்ள அரசு அனுமதித்துள்ளது.

ஒரு காற்று குமிழி என்பது இரு நாடுகளுக்கும் இடையிலான பயண நடைபாதையாகும்,.அவை தங்கள் விமானங்களை ஒழுங்குபடுத்தப்பட்ட சூழலில் பறக்க அனுமதிக்கும்.

எனினும், டி.ஜி.சி.ஏ’ஆல் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச அனைத்து சரக்கு விமானங்களுக்கு எந்த தடையும் இருக்காது என்று சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் மார்ச் 23 முதல் வழக்கமான சர்வதேச பயணிகள் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால் சிறப்பு சர்வதேச விமானங்கள் வந்தே பாரத் மிஷனின் கீழ் மே முதல் மற்றும் ஜூலை முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளுடன் இருதரப்பு காற்று குமிழி ஒப்பந்தங்களின் கீழ் இயங்கி வருகின்றன.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், கென்யா, பூட்டான் மற்றும் பிரான்ஸ் உட்பட சுமார் 18 நாடுகளுடன் இந்தியா காற்று குமிழி ஒப்பந்தங்களை உருவாக்கியுள்ளது.

இரு நாடுகளுக்கிடையேயான ஒரு விமான குமிழி ஒப்பந்தத்தின் கீழ், சிறப்பு சர்வதேச விமானங்களை அவற்றின் பிராந்தியங்களுக்கு இடையில் தங்கள் விமான நிறுவனங்கள் எந்தவித தடங்களுமின்றி இயக்க முடியும்.

Views: - 30

0

0