நாடு முழுவதும் என்ஆர்சி அமல்படுத்தப்படுமா? மத்திய அரசு சொன்ன ‘நிம்மதி’ பதில்!

4 December 2019, 10:17 pm
Central Goverment Order-Updatenews360
Quick Share

டெல்லி: மத அடிப்படையில் தேசிய மக்கள் பதிவேடு அமல்படுத்தப்படாது என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் திரிணாமூல் காங்கிரசின் எம்பி அகமது ஹாசன் ஒரு கேள்வி எழுப்பினார். மத அடிப்படையில் தேசிய மக்கள் பதிவேட்டை அமல்படுத்தும் மத்திய அரசுக்கு உள்ளதா என்றார்.

அதற்கு இல்லை என்று உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய்  எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். தமது மாநிலத்தில் என்ஆர்சியை அமல்படுத்த மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

ஆனால், என்ஆர்சியை அமல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது. 2024ம் ஆண்டுக்குள் இந்தியாவில் ஆவணங்களின்றி குடியேறி இருப்பவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெளிவுப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.