ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி..! நீட் 2021 நுழைவுத் தேர்வு திட்டமிட்டபடி நடக்குமா..? மத்திய அமைச்சர் முக்கிய அறிவிப்பு..!

10 December 2020, 11:48 am
Ramesh_Pokhriyal_UpdateNews360
Quick Share

மருத்துவ படிப்புகளுக்கான நீட் 2021 நுழைவுத் தேர்வு தொடர்பான ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் இன்று நீட் 2021’ஐ ரத்து செய்ய எந்த திட்டமும் இல்லை என்று கூறினார்.

ஒரு வெபினாரில் கல்வி அமைச்சர், 2021 இல் போர்டு மற்றும் நுழைவுத் தேர்வுகள் நடக்குமா என்பது குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது இதைத் தெரிவித்தார்.

ட்விட்டரில் நேரடி கலந்துரையாடலின் போது மாணவர்களிடையே உரையாற்றும் போது, நீட் 2021’ஐ ரத்து செய்ய எந்த திட்டமும் இல்லை என்று பொக்ரியால் கூறினார். “நாங்கள் 2020’ஆம் ஆண்டில் மூன்று முறை நீட் ஒத்திவைத்தோம். மாணவர்களுக்கு அவர்களின் தேர்வு மையங்களை மாற்றுவதற்கான வாய்ப்பை வழங்கினோம். நாம் தேர்வை ரத்து செய்திருக்கலாம். ஆனால் இது மாணவர்களுக்கும் நாட்டிற்கும் பெரும் இழப்பாக இருந்திருக்கும்.” என்று கல்வி அமைச்சர் கூறினார்.

பாடத்திட்டங்களைக் குறைப்பது குறித்து மாணவர்கள் எழுப்பிய கேள்விக்கு உரையாற்றிய பொக்ரியால், “நாங்கள் இதை தொடர்ந்து விவாதித்து வருகிறோம். மேலும் பாடத்திட்டங்கள் குறைப்பு மற்றும் கேள்விகள் வடிவமைப்பு குறித்து ஆய்வு செய்து வருகிறோம்” என அவர் மேலும் கூறினார்.

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக இந்த ஆண்டு பொதுத் தேர்வுகள் மற்றும் நுழைவுத் தேர்வின் வழக்கமான செயல்பாட்டுக்கு இடையூறு விளைவித்தது. தேசிய தேர்வு முகமை கடந்த ஜனவரி மாதம் ஜே.இ.இ மெயின் 2020’இன் முதல் அமர்வை வெற்றிகரமாக நடத்தியது. ஆனால் இரண்டாவது அமர்வை கொரோனா காரணமாக ஒத்திவைக்க வேண்டியிருந்தது.

மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் எதிர்ப்புக்கள் இருந்தபோதிலும், உச்சநீதிமன்றத்தின் அனுமதியின் பின்னர், கடந்த செப்டம்பர் மாதம் ஜே.இ.இ. நுழைவுத் தேர்வை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இதே போல் நீட் 2020 தேர்வும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அரசாங்க வழிகாட்டுதல்களைப் பின்பற்றி செப்டம்பர் மாதம் நடைபெற்றது.

இந்நிலையில் அடுத்த வருடன் நீட் உள்ளிட்ட மத்திய அரசின் நுழைவுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும் என்பதை தற்போதே மத்திய அமைச்சர் உறுதி செய்துள்ளார்.

Views: - 0

0

0