நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லையாம்…! ப்ரியங்கா விவகாரத்தை முன்வைத்து வாய் திறந்த வதேரா

3 December 2019, 11:52 am
Quick Share

டெல்லி: நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று ப்ரியங்கா காந்தியின் கணவரும், தொழிலதிபருமான ராபர்ட் வதேரா வாய் திறந்திருக்கிறார்.

காங்கிரசில் காந்தி குடும்பத்தினர் உள்ளிட்ட பல முக்கிய அரசியல் தலைவர்களின் பாதுகாப்பில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வந்தது. காந்தி குடும்பத்துக்கு கொடுக்கப்பட்டு வந்த எஸ்பிஜி எனும் சிறப்பு படை பாதுகாப்பை மத்திய அரசு வாபஸ் பெற்றது.

இதற்கு காங்கிரசின் முக்கிய தலைவர்களிடம் இருந்து கண்டனங்கள் குவிந்தன. ஆனால், அதற்கு நேராக சோனியா காந்தி எஸ்பிஜி பாதுகாப்பு படைக்கு நன்றி தெரிவித்தார்.

இது ஒருபுறம் இருக்க டெல்லியில் உள்ள ப்ரியங்கா காந்தியின் வீட்டுக்குள் சிலர் நுழைந்து அவருடன் செல்பி எடுக்க முயன்றதாக தகவல் வெளியானது. பாதுகாப்பு குறைபாடு இதற்கு காரணம் என்று கூறப்பட்டது.

இந் நிலையில் அவரது கணவர் ராபர்ட் வதேரா, நாட்டில் இப்போது பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுகிறது என்று கூறி இருக்கிறார். அவர் மேலும் கூறியிருப்பதாவது:

ப்ரியங்காவுக்கு மட்டும் பாதுகாப்பில்லை. நாட்டில் எந்த பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லை. பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகின்றனர். என்ன மாதிரியான சமூகத்தை நாம் உருவாக்குகிறோம்?

ஒவ்வொரு குடிமகனுக்கும் பாதுகாப்பு அளிப்பது அரசின் கடமை. நமக்கே பாதுகாப்பு இல்லை என்னும் போது, நாட்டை எப்படி பாதுகாப்பது? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

1 thought on “நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லையாம்…! ப்ரியங்கா விவகாரத்தை முன்வைத்து வாய் திறந்த வதேரா

Comments are closed.