ஊரடங்கு ரத்து..! மாணவர்களுக்கு இலவச போக்குவரத்து..! ஜேஇஇ நீட் தேர்வுகளை நடத்த தயார் நிலையில் ஒடிசா அரசு..!

29 August 2020, 2:40 pm
jee_neet_exams_updatenews360
Quick Share

மாநிலத்தில் ஜே.இ.இ மற்றும் நீட் தேர்வு நடைபெறும் ஏழு நகரங்களில் ஒடிசா அரசு ஊரடங்கை வாபஸ் பெற்றுள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஜே.இ.இ (மெயின்ஸ்) மற்றும் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாநில அரசு இலவச போக்குவரத்து மற்றும் தங்குமிடம் வழங்கும் என்று நேற்று தலைமைச் செயலாளர் ஏ.கே. திரிபாதி அறிவித்ததை அடுத்து ஏழு நகரங்களில் ஊரடங்கை நீக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. சிறப்பு நிவாரண ஆணையர் (எஸ்.ஆர்.சி) அலுவலகம் தேர்வை சீராக நடத்துவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

“ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 7 வரை ஜேஇஇ மற்றும் செப்டம்பர் 9-14 முதல் நீட் தேர்வு நடத்தப்படும் ஏழு நகரங்களில் ஊரடங்கு நடைமுறையில் இருக்காது” என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டாக், குர்தா, கஞ்சம் மற்றும் கஜபதி ஆகிய நான்கு மாவட்டங்களில் தற்போது இரண்டு நாள் வாராந்திர ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.

அனைத்து தேர்வர்களும் அவர்களின் பாதுகாவலரும், தேர்வுப் பணியாளர்களும் தங்கியிருக்கும் இடத்திலிருந்து தேர்வு நடக்கும் இடங்களுக்கு தங்கள் சொந்த வாகங்களிலோ அல்லது வாடகை வாகனங்களிலோ அல்லது அரசின் வாகனங்களிலோ பயணிக்க அனுமதிக்கப்படுவதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஊழியர்கள் மற்றும் தேர்வர்கள் தாங்கள் வைத்திருக்கும் தாங்கள் வைத்திருக்கும் ஆவணங்கள் மூலம் மாநிலம் முழுவதும் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

எஸ்.ஆர்.சி பி.கே.ஜீனா, கொரோனா தொடர்பான அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் உறுதி செய்யுமாறு தேர்வு அமைப்பாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். சமூக இடைவெளி, முககவசம் அணிவது மற்றும் தனிப்பட்ட சுகாதாரம் போன்றவை மையத்திற்குள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். தேர்வு மையங்களுக்கு வெளியே மாவட்ட அதிகாரம் இதை உறுதி செய்யும்என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

புவனேஸ்வர், கட்டாக் உள்ளிட்ட ஏழு வெவ்வேறு நகரங்களில் பரவிய 26 மையங்களில் 37,000 பேர் தேர்வில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது என்று தலைமைச் செயலாளர் தெரிவித்தார்.

மேலும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பாதுகாவலர்களுக்கு மாநில அரசு இலவச போக்குவரத்து மற்றும் தங்குமிட ஏற்பாடுகளை வழங்கும் என ஒடிசா அரசு அறிவித்துள்ளது.

Views: - 28

0

0