இனி ரயில்களில் ஏ.சி. படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் மட்டும் தானா..? இமாலய மாற்றத்திற்கு தயாராகும் இந்தியன் ரயில்வே..!

By: Sekar
11 October 2020, 7:48 pm
Indian_Railways_UpdateNews360
Quick Share

இந்தியன் ரயில்வே நெட்வொர்க்கில் 130 கி.மீ வேகத்தில் அல்லது அதற்கு மேற்பட்ட வேகத்தில் அடையாளம் காணப்பட்ட பாதைகளில் இயங்கும் ரயில்களில் நெட்வொர்க்கை மேம்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, எதிர்காலத்தில் ஏ.சி. படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் மட்டுமே இருக்கும் என்று ஒரு அதிகாரி இன்று தெரிவித்தார்.

இதுபோன்ற ரயில்களின் டிக்கெட் விலை மலிவாகவே இருக்கும் என்று வலியுறுத்திய ரயில்வே அமைச்சக செய்தித் தொடர்பாளர் டி ஜே நரேன், ஏசி அல்லாத அனைத்து கோச்களும் ஏசி கோச்களாக மாற்றப்படும் என்று தவறாகக் கருதக்கூடாது என்று தெளிவுபடுத்தினார்.

தற்போது பெரும்பாலான வழித்தடங்களில், மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம் 110 கிமீ அல்லது அதற்கும் குறைவான உச்சவரம்பையே கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ராஜ்தானி, சதாப்தி மற்றும் துரோன்டோ போன்ற பிரீமியம் ரயில்கள் குறிப்பிடத்தக்க பகுதிகளில் 120 கி.மீ வேகத்தில் இயக்க அனுமதிக்கப்படுகின்றன. இதுபோன்ற ரயில்களுக்கான ரேக்குகள் 130 கி.மீ அல்லது அதற்கு மேல் இயக்க வகை செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

110 கி.மீ வேகத்தில் இயங்கும் ரயில்களில் ஏசி அல்லாத கோச்கள் தொடர்ந்து இயக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

“மாற்றியமைக்கப்பட்ட ஏசி கோச்களின் டிக்கெட்டுகளின் விலை பயணிகளுக்கு மிகவும் மலிவு விலையில் கிடைப்பது உறுதி செய்யப்படும். மேலும் வசதிகளும் பன்மடங்கு அதிகரிக்கும் மற்றும் பயண நேரத்தில் கணிசமான குறைப்பு உள்ளது” என்று நரேன் கூறினார்.

இதுபோன்ற ஏசி கோச்சின் முன்மாதிரி கபுர்தலாவில் உள்ள ரயில் கோச் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், சில வாரங்களில் சோதனை ஓட்டத்திற்கு தயாராக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

Views: - 97

0

0