“யாரையும் விட்டுவிட மாட்டோம்”..! போலி மதுபான விவகாரத்தில் பொங்கிய பஞ்சாப் முதல்வர்..!

7 August 2020, 5:56 pm
amarinder_singh_updatenews360
Quick Share

பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் டார்ன் தரன் மாவட்டத்தில் போலி மதுபானத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சந்தித்து, இது ஒரு விபத்து அல்ல என்றும் இதில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் கூறினார்.

போலி மதுபானத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை 121’ஆக உயர்ந்துள்ளது. டார்ன் தரனில் 92 பேர் இது வரை இறந்துள்ளனர். அதே நேரத்தில் அமிர்தசரஸில் 15 பேரும், குர்தாஸ்பூரில் 14 பேரும் இறந்துவிட்டனர்.

“சம்பந்தப்பட்ட எவரும் காப்பாற்றப்பட மாட்டார்கள். சம்பந்தப்பட்ட எவருக்கும் சட்டப்படி கடுமையான தண்டனை வழங்கப்படும்” என்று டார்ன் தரனில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களிடம் உரையாற்றும் போது அவர் கூறினார்.

சிங் குடும்பங்களுடன் அவர் பேசினார் மற்றும் குற்றவாளிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஒரு அடிப்படை மதிப்பீட்டை எடுத்தார்.

மாநில காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாகருடன் வந்த முதல்வர், இறந்தவரின் உறவினர்களுக்கு இழப்பீடு ரூ 2 லட்சத்திலிருந்து ரூ 5 லட்சமாக அதிகரிப்பதாக அறிவித்தார். மேலும் இந்த விவகாரத்தில் கண்பார்வை இழந்தவர்களுக்கு ரூ 5 லட்சம் இழப்பீடு வழங்குவதாகவும் அவர் அறிவித்தார்.

இந்த சோகத்தில் பல குடும்பங்கள் தங்களது வாழ்வாதரத்தை இழந்துவிட்டதாக முதல்வர் கூறினார்.

“இதுபோன்ற சட்டவிரோத மதுபானங்களை தயாரிப்பதைப் பற்றி மக்கள் எப்படி யோசிக்க முடியும் என்று நம்புவது கடினம். மேலும் கடவுளுக்கு பயப்படாதவர்கள்” என்று அவர் கூறினார்.

முன்னதாக, சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன என குற்றம் சுமத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 8

0

0