வட மாநிலங்களில் வெளுத்து வாங்கும் மழை.., பொதுமக்கள் அவதி..!

28 August 2020, 12:58 pm
Quick Share

வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த பகுதி வடக்கு ஒடிசா கடற்கரைக்கு நோக்கி நகர்கிறது. இதன் காரணமாக ஒதிசா, ஜார்கண்ட் உள்ளிட்ட 8 வட மாநிலங்களில் அதீத மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில், ஓடிசா. ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மழை கொட்டி தீர்த்து வருகிறது. ஒடிசாவில் ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் சிறமத்திற்கு ஆளாகினர். தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகினறனர்.

இது குறித்து ஜம்மு காஷ்மீர், ரஜோரி மாவட்டத்தில் உள்ள கச்சா வீடு பகுதியை சேர்ந்த அப்துல் என்பவரிடம் தனியார் செய்தி நிறுவனம் ஒன்று பேட்டி எடுத்துள்ளது. அவர் கூறுகையில், கனமழை பெய்து வரும் சூழலில் நிலச்சரிவுகள் ஏற்படுகிறது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை, நாங்கள் உயிருக்கு ஆபத்தான அச்சத்தோடு உள்ளோம் என தெரிவித்துள்ளார்.

Views: - 33

0

0