“வடமாநிலங்களில் வெள்ள பெருக்கு அபாயம்” ஐஎம்டி எச்சரிக்கை..!
27 August 2020, 5:10 pmஅடுத்த 24 மணி நேரத்தில் ஒதிசா, ஜார்கண்ட் உள்ளிட்ட 8 வட மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என மத்திய நீர் ஆணையம் அதிகாரப்பூர்வ முன்னறிவிப்பு வழங்கியுள்ளது.
வங்காள விரிகுடாவில் உள்ள குறைந்த அழுத்த பகுதி வடக்கு ஒடிசா கடற்கரைக்கு நகர்கிறது. இதன் காரணமாக ஒதிசா, ஜார்கண்ட் உள்ளிட்ட 8 வட மாநிலங்களில் அதீத மழை பெய்யும் என ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்தநிலையில், ஒதிசா மாநிலத்தின் கலிங்கா நகர், ஜெய்ப்பூர் பகுதியில் ஏற்கனவே கனமழை பெய்து வருவதால், அங்குள்ள நீர்நிலைகள் நிறம்பி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில் இன்று ஐஎம்டி அதிகாரப்பூர்வ தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஒதிசா, ஜார்கண்ட், சட்டீஸ்கர், கிழக்கு உத்தரப்பிரதேசம், கிழக்கு மற்றும் மேற்கு மத்திய பிரதேசம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களின் பல்வேறு இடங்களில் அதித மழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், இயற்கை இடர்பாடுகளை தவிற்க மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். கொரோனா அச்சம் நீடிக்கும் சூழலில் மழையின் தாக்கமும் அதிக அளவில் இருப்பதால் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.