திருமணமாகி 22 மாதங்கள் ஆகியும் உடலுறவிற்குத் தடை..! விரக்தியில் கணவன் தற்கொலை..!

11 August 2020, 5:26 pm
Man_Dead_UpdateNews360
Quick Share

அகமதாபாத்தைச் சேர்ந்த 32 வயது நபர் ஒருவர் தனது மனைவி, திருமணமானத்திலிருந்து உடலுறவு கொள்ள அனுமதிக்காததால் விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் அகமதாபாத்தில் சரஸ்பூர் பகுதியில் நடந்தது. அந்த நபரின் குடும்பத்தினர் ஒரு இறுதி சடங்கில் கலந்து கொள்ளச் சென்றிருந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த இவர் தற்கொலை செய்து கொண்டார். 

அந்த நபர் ஜூலை 27 அன்று தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார். இந்தியன் ரயில்வேயில் பணிபுரியும் சுரேந்திரசிங் எனும் அந்த நபர், கீதா எனும் பெண்ணை 22 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். கீதா அகமதாபாத்தின் ஜெயந்தி வாகீல் சாவ்ல் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

முன்னதாக 2016’ஆம் ஆண்டில், சுரேந்திரசிங் தனது முதல் மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்றார். இதையடுத்து அக்டோபர் 2018’இல், கீதாவை மணந்துள்ளார். கீதா சுரேந்திரசிங்கை திருமணம் செய்வதற்கு இரண்டு ஆண்களிடமிருந்து விவாகரத்து மூலம் இரண்டு ஆண்களைப் பிரிந்துள்ளார்.

இது தொடர்பாக சுரேந்திரசிங்கின் தாய், தம்பதியினர் இருவரும் ஒரே படுக்கையில் உறங்குவதில்லை எனத் தெரிவித்தார். 32 வயதான சுரேந்திர சிங்கின் தாயார் மேலும், இருவரும் திருமணமாகி 22 மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும், அவர் தனது மனைவியுடன் உடல் உறவு கொள்ளவில்லை என்று கூறினார். கீதா தனது கணவருடன் ஒருபோதும் ஒன்றாக தூங்கமாட்டேன் என்று சபதம் எடுத்ததாகக் கூறினார்.

இறந்தவரின் தாயார் முலி பர்மர் தனது மகன், தனது மனைவியுடன் தூங்க அனுமதிக்காததால் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறினார். நேரம் செல்ல செல்ல, அவர்களுக்குள் சிறிய பிரச்சினைகள் குறித்து கூட வாக்குவாதம் பெரிய அளவில் வெடிக்கத் தொடங்கியது என்று அவர் மேலும் கூறினார். இந்நிலையில் கீதா தனது கணவரின் வீட்டை விட்டு வெளியேறி தனது பெற்றோரிடம் சென்றபோது நிலைமை இன்னும் மோசமாக மாறியது. கீதாவின் எண்ணை சுரேந்திரசிங் பிளாக் செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இருந்தும் அவர் தொடர்ந்து மன அழுத்தத்திலேயே இருந்தார்.

இதையடுத்து ஜூலை 27 அன்று, மற்ற குடும்ப உறுப்பினர்கள் இறுதி சடங்கில் கலந்து கொள்ள வெளியே சென்ற போது, அவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். ஆகஸ்ட் 6’ம் தேதி சுரேந்திரசிங்கின் தாய் போலீஸை அணுகி கீதா மீது புகார் அளித்தார். இதையடுத்து கீதா மீது தற்கொலைக்கு தூண்டியதற்காக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Views: - 30

0

0