53 எம்எல்ஏக்களுக்கு தகுதி நீக்க நோட்டீஸ்… உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு.. அதிர்ச்சியில் ஆளுங்கட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
9 July 2023, 1:47 pm
SC Sivasena - Updatenews360
Quick Share

53 எம்எல்ஏக்களுக்கு தகுதி நீக்க நோட்டீஸ்… உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு.. அதிர்ச்சியில் ஆளுங்கட்சி!!

முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அணியின் 39 பேர், உத்தவ் தாக்கரே அணியின் 14 பேர் என சிவசேனா கட்சியின் மொத்தமுள்ள 53 எம்.எல்.ஏ.களுக்கு தகுதி நீக்க நோட்டீசை சட்டப்பேரவை சபாநாயகர் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி நடவடிக்கை எடுத்துள்ள சபாநாயகர், அனைத்து எம்.எல்.ஏ.க்களும் 7 நாட்களுக்குள் விளக்கமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்போது, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 53 சிவசேனா எம்எல்ஏக்கள் மீது தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களின் சட்டப் பேரவை உறுப்பினர் பதவியை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஆனால், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா சமர்ப்பித்த பட்டியலில் ஆதித்யா தாக்கரேவின் பெயர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 332

0

0