உடனே கிளம்பி வாங்க… டிஜிபி முதல் முக்கிய அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட உத்தரவு!!
Author: Udayachandran RadhaKrishnan9 ஜூலை 2023, 12:29 மணி
மாநிலத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு சூழல் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 11ம் தேதி தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில், அனைத்து மாவட்ட எஸ்.பி.க்கள் உள்பட அனைத்து உயர் காவல் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். காவலர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையிலான ஆலோசனைகளும் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
புதிய டிஜிபிக்கு முக்கியமான அசைன்மென்ட் ஒன்றை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. லோக்சபா தேர்தலை மனதில் வைத்து இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
Views: - 277
0
0