இலங்கை மற்றும் மாலத்தீவுடன் முத்தரப்பு கடல் சார் பாதுகாப்புக் கூட்டம்..! என்எஸ்ஏ அஜித் தோவல் பங்கேற்பு..!

27 November 2020, 11:16 am
NSA_Ajit_Doval_UpdateNews360
Quick Share

ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றதிலிருந்து அண்டை நாடுகளுடனான ஆரோக்கியமான இராஜதந்திர உறவுகள் முன்னுரிமையாக இருந்து வருகின்றன. இந்த நோக்கத்தின்படி, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இலங்கை மற்றும் மாலத்தீவு இடையே ஒரு முத்தரப்பு கடல் சார்ந்த பாதுகாப்பு குறித்த உரையாடலுக்காக இன்று கொழும்பு செல்கிறார்.

“இந்தியா மற்றும் மாலத்தீவுடனான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான நான்காவது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் முத்தரப்பு கூட்டத்தை நவம்பர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் இலங்கை நடத்தும்” என்று இலங்கையின் இராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் சந்தனா விக்ரமசிங்க தெரிவித்தார்.

இதுபோன்ற கடைசி சந்திப்பு 2014’ல் புதுடெல்லியில் நடந்தது. தோவல் மற்றும் மாலத்தீவு பாதுகாப்பு மந்திரி மரியா திதி ஆகியோர் அந்தந்த நாடுகளின் பிரதிநிதிகளை வழிநடத்துவார்கள். பங்களாதேஷ், மொரீஷியஸ் மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகளிலிருந்தும் பார்வையாளர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளார்கள்.

இந்த உயர்மட்ட சந்திப்பு கடல் சார்ந்த விழிப்புணர்வு, சட்ட ஆட்சிகள், தேடல் மற்றும் மீட்புக்கான நடவடிக்கைகள், கடல் மாசுபாடு குறைப்பு, தகவல் பகிர்வு, திருட்டுத்தனத்தை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு இடையிலான கடல்சார் பாதுகாப்பு குறித்த ஒரு கூட்டு நடவடிக்கையைத் தொடங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் போதைப்பொருள் ஆயுதங்கள் மற்றும் சட்டவிரோத கடத்தல் தடுப்புக்கு இந்த கூட்டம் முக்கியத்துவம் கொடுப்பதாகக் கூறப்படுகிறது

இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் இது தொடர்பாக வெளியிட்ட ஒரு அறிக்கையில், என்எஸ்ஏ அளவிலான முத்தரப்பு கூட்டம் இந்தியப் பெருங்கடலில் பரவியுள்ள நாடுகளிடையே ஒத்துழைப்புக்கான ஒரு சிறந்த தளமாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது.

“இந்த சந்திப்பு இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பில் ஒத்துழைப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்க ஒரு வாய்ப்பை வழங்கும்” என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த கூட்டத்திற்குப் பிறகு, இலங்கை பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவுடன் தோவல் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 0

0

0