நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இணைய வழி போராட்டம் : ட்விட்டரில் டிரெண்டான ஹேஷ்டேகுகள்..!

13 September 2020, 11:04 am
Quick Share

நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில் ட்விட்டரில் #BanNEET_SaveTNStudent என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது.

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் இன்று நடக்கிறது. இந்த நிலையில், தமிழகத்தில் நீட் தேர்வு அச்சத்தால், நேற்று ஒரே நாளில் மதுரையை சேர்ந்த மாணவி, தர்மபுரி, திருச்செங்கோடைச் சேர்ந்த 2 மாணவர்கள் என அடுத்தடுத்து 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன், நீட் தேர்வுக்கு தயாரான அரியலூரைச் சேர்ந்த மாணவர் விக்னேஷ் மன உளைச்சலால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தின் அதிர்ச்சி அலை ஓய்வதற்குள், மாணவி ஜோதி துர்கா மற்றும் மாணவர்கள் ஆதித்யா, மோதிலால் ஆகிய மூன்று பேர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்தனர்.

இந்த நிலையில், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இணைய வழி போராட்டம் நடைபெற்று வருகிறது. இணையவாசிகள் #BanNEET_SaveTNStudent, #NEET2020, #NEETSuicide #BAN_NEET #DropNEET #NEET #Govt_Killed_NEET_Students #NEETExam என்ற ஹேஷ்டேக்கை டுவிட்டரில் டிரெண்டிங் செய்து வருகின்றனர். தற்போது, #BanNEET_SaveTNStudent ஹேஷ்டேக் தமிழகத்தில் டிரெண்டிங் ஆகி ட்விட்டரில் முதலிடத்தில் உள்ளது. #Govt_Killed_NEET_Students என்ற ஹேஷ்டேக் இந்தியளவில் ட்விட்டரில் 4-வது இடத்தில் உள்ளது.

Views: - 0

0

0