‘செவிலியர்களின் அர்ப்பணிப்பும் கருணையும் சிறந்த முன்னுதாரணம்’: பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வாழ்த்து..!!

Author: Rajesh
12 May 2022, 10:33 am
Quick Share

புதுடெல்லி: பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த மே 12ம் தேதி சர்வதேச செவிலியர் தினமாக கொண்டாடப்படுவதையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சர்வதேச செவிலியர் தினம் மே 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. செவிலியர்களின் முன்னோடியாக விளங்குபவர் பிளாரன்ஸ் நைட்டிங்கேல்.

கைவிளக்கு ஏந்திய காரிகை என்று போற்றப்படும் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த மே 12ம் தேதி சர்வதேச செவிலியர் தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்படுவதையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது, நமது பூமியை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் செவிலியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவர்களின் அர்ப்பணிப்பும் கருணையும் சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறது.

சர்வதேச செவிலியர் தினமானது, அனைத்து செவிலியர் ஊழியர்களுக்கும் நமது பாராட்டுக்களை மீண்டும் வலியுறுத்தும் நாள். மிகவும் சவாலான சூழ்நிலையிலும், செவிலியர்களின் சிறப்பான பணிக்காக அனைத்து செவிலியர்களுக்கும் நமது பாராட்டுக்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Views: - 668

0

1