உயர் சாதியினரின் தோட்டத்தில் பூ பறித்த சிறுமி..! 40 தலித் குடும்பங்களுக்கு நேர்ந்த அவலம்..!

25 August 2020, 2:02 pm
Odisha_Village_UpdateNews360
Quick Share

ஒடிசாவில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவமாக, தெங்கனல் மாவட்டத்தின் கான்டியோ கட்டேனி கிராமத்தில் சுமார் 40 தலித் குடும்பங்கள் ஒரு உயர் சாதி நபரின் தோட்டத்தில் இருந்து 15 வயது சிறுமி பூக்களை பறித்ததை அடுத்து சமூக புறக்கணிப்புக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கிராமத்தில் 700’க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. அவற்றில் 40 பட்டியல் இனத்தைச் சேர்ந்த நாயக் சமூகத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

“அந்த பகுதியில் உள்ள இரு சமூகங்களும் ஒரு பழைய போட்டி காரணமாக நீண்ட காலமாக முரண்பட்டிருந்தன. மேலும் ஒரு உயர் சாதியினரின் தோட்டத்தில் இருந்து பெண் பூக்களைப் பறித்தபின் அது ஒரு பெரிய சர்ச்சையில் சிக்கியது” என்று துமுசிங்க காவல் நிலைய ஆய்வாளர் ஏ.கே. டங்டங் கூறினார்.

கிராமவாசிகளின் கூற்றுப்படி, தலித் சமூகத்தைச் சேர்ந்த சிறுமி இரண்டு மாதங்களுக்கு முன்பு பூக்களை பறித்தார் என அறிய முடிகிறது. சிறுமியின் பெற்றோரும் மன்னிப்பு கேட்டு, கிராம பஞ்சாயத்திடம் கெஞ்சினார்கள். ஆனால் உயர் சாதியினரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. இந்நிலையில் போலீஸ் மற்றும் அரசு நிர்வாகத்தின் தலையீட்டைத் தொடர்ந்து அவர்களின் சோதனைகள் முடிவடைந்தன என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.

மேலும் அவர்களுக்குத் தண்டனையாக குடும்பங்கள் சடங்குகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது மற்றும் கிராமத்தில் யாருடனும் பேச அனுமதிக்கப்படுவதில்லை. உண்மையில், அரசாங்க ரேஷன் கடைகளிலும் பொருட்களை வழங்க வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளதுடன், சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் இடமாற்றம் பெற நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்று குடும்பங்கள் குற்றம் சாட்டுகின்றன. இருப்பினும், இந்த விவகாரம் இப்போது தீர்க்கப்பட்டுள்ளது.

“ஒரு சூரியகாந்தி பூவை பறித்ததால், தலித்துகளான நாங்கள் புறக்கணிக்கப்பட்டோம். காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த விஷயத்தை தீர்க்க போலீசார் இரு சமூகங்களையும் அழைத்தனர். ஆனால் அவர்கள் கீழ்ப்படியவில்லை. எனவே சில நாட்களுக்குப் பிறகு நாங்கள் மீண்டும் புகார் செய்தோம். இப்போது விசயம் அதிகாரிகள் முன் தீர்க்கப்பட்டுள்ளது.” என்று கிராமவாசியும் தலித் சமூக உறுப்பினருமான பிஜய் குமார் நாயக் கூறினார்.

கிராமவாசியும் உயர் சாதி சமூக உறுப்பினருமான ஹார்மன் மொஹாலிக் கூறுகையில், “இது தலித் சமூகத்துக்கும் எங்கள் சமூகத்துக்கும் இடையில் ஒரு சிறிய பிரச்சினையாக இருந்தது. இந்த விவகாரம் ஏற்கனவே காவல்துறை மற்றும் பிற அதிகாரிகள் முன் தீர்க்கப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்தார்.

கிராமவாசிகள் முன்பு வாழ்ந்ததைப் போலவே வாழ்ந்து வருகிறார்கள் என்று கிராம பஞ்சாயத்து உறுப்பினர் பிரணபந்து தாஸ் கூறினார்.

“இது இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்தது. ஆனால் மக்கள் அதை சமூகங்கள் தொடர்பான ஒரு விசயமாக மாற்றினர். இன்று அது போலீஸ் நிலையத்தில் அதிகாரிகளின் முன்னால் தீர்க்கப்பட்டது. இரு சமூகங்களுக்கிடையிலான கலந்துரையாடலின் படி இப்போது நாங்கள் முன்பு போலவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.” என்று தாஸ் கூறினார் .

Views: - 36

0

0