நூற்றாண்டு கனவை நனவாக்கிய நீரஜ் சோப்ரா : கொட்டும் வாழ்த்து மழையும்.. பரிசுத் தொகையும்..!!

Author: Babu Lakshmanan
7 August 2021, 7:21 pm
Quick Share

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு பாராட்டுக்களும், பரிசுகளும் குவிந்து வருகின்றன.

டோக்கியோ ஒலிம்பிக்கின் ஒரு பகுதியாக ஈட்டி எறியும் போட்டியின் இறுதிச்சுற்று இன்று நடைபெற்றது. இந்தியாவின் நீரஜ் சோப்ரா 87.58 மீட்டர் தூரம் வீசி முதலிடம் பிடித்தார். கொடுக்கப்பட்ட 6 வாய்ப்புகளில் வேறு யாரும் நீரஜ் சோப்ராவின் தொலைவை கடந்து வீசவில்லை. இதனால், இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். செக்குடியரசின் வேட்லெஜ் மற்றும் வெசேலே முறையே வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றனர்.

100 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு ஒலிம்பிக் தடகளத்தில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவை இந்தியாவே கொண்டாடி வருகிறது. அவரது சொந்த மாநிலமான ஹரியானாவில் மேளங்கள் அடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண

இதனிடையே, தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டேர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “டோக்கியோவில் புதிய வரலாறு எழுதப்பட்டிருக்கிறது. என்றென்றும் நினைவில் நிற்கும் வெற்றி இது. இளம் நீரஞ் சோப்ரா அபாரமாக செயல்பட்டுள்ளார். தங்கம் வென்ற அவருக்கு எனது வாழ்த்துக்கள்,” எனக் குறிப்பிட்டார்.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ” நீரஜ் சோப்ராவின் வரலாறு காணாத வெற்றி! ஈட்டி எறிதலில் நீங்கள் வென்ற தங்கம் தடைகளை உடைத்து வரலாற்றை உருவாக்கியுள்ளது. பங்கேற்ற முதல் ஒலிம்பிக்கிலேயே தங்கத்தை வென்றுள்ளீர்கள். உங்கள் சாதனை இளைஞர்களை ஊக்குவிக்கும். இந்தியா மகிழ்ச்சியடைகிறது! மனமார்ந்த வாழ்த்துக்கள்!,” எனக் கூறியுள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “ஒலிம்பிக் தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற இந்தியாவின் 120 வருட கனவை நிஜமாக்கிய நீரஜ் சோப்ரா அவர்களுக்கு வாழ்த்துகள். கோடிக்கணக்கான இதயங்களில் நீங்கள் ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளீர்கள்” என தெரிவித்துள்ளார்

ராமதாஸ் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில்,”டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்துள்ள ஈட்டி எரியும் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பாராட்டுகள். ஒலிம்பிக் தடகள போட்டிகளில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு தங்கம் வென்று கொடுத்த அவரது சாதனை ஈடு இணையற்றது!,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு அவரது சொந்த மாநிலமான ஹரியானா அரசு ரூ. 6 கோடியை பரிசுத் தொகையாக அறிவித்துள்ளது. மேலும், கிரேடு-1 அரசுப் பணி வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 610

1

0