ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தல்: விமான போக்குவரத்துக்கு தடை விதிக்க வேண்டும்…பிரதமருக்கு கெஜ்ரிவால் வலியுறுத்தல்..!!

Author: Aarthi Sivakumar
27 November 2021, 1:37 pm
Quick Share

புதுடெல்லி: புதிய வகை ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து இயக்கப்படும் விமானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.

உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவைத் தொடர்ந்து ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல் ஆகிய நாடுகளிலும் இந்த வைரஸ் கால் பதித்துள்ளது. இதுவரை 60 பேருக்கு இந்த உருமாறிய வைரஸ் பாதித்து இருக்கிறது.

இந்த புதிய வகை வைரசுக்கு ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கிடையே புதிய கொரோனா பரவியுள்ள தென் ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, ஹாங்காங் ஆகியவற்றில் இருந்து இந்தியாவுக்கு வருகிறவர்களை தீவிரமாக பரிசோதிக்க வேண்டும் என்று மாநிலங்களை மத்திய அரசு உஷார்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் ஒமிக்ரான் வகை கொரோனோ பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நாடுகளில் இருந்து இயக்கப்படும் விமானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்த தனது ட்விட்டர் பதிவில்,

புதிய வைரஸ் மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து விமான இயக்கங்களை நிறுத்துமாறு பிரதமரை நான் கேட்டுக்கொள்கிறேன். மிகவும் சிரமப்பட்டு, கொரோனாவில் இருந்து நம் நாடு மீண்டுள்ளது. இந்த புதிய மாறுபாடு வைரஸ் இந்தியாவிற்குள் நுழைவதைத் தடுக்க முடிந்த அனைத்தையும் செய்வோம் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Views: - 306

0

0