இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் 3வது அலையை விரைவில் ஏற்படுத்தும்: ஐ.ஐ.டி விஞ்ஞானியின் அதிர்ச்சி தகவல்..!!

Author: Aarthi Sivakumar
7 December 2021, 11:04 am
Quick Share

மும்பை: உருமாற்றமடைந்த ஒமைக்ரான் வைரசால் பிப்ரவரிக்குள் 3வது அலை ஏற்படும் என்று ஐ.ஐ.டி. விஞ்ஞானி மனிந்திர அகர்வால் கணித்துள்ளார்.

கொரோனா உருமாறிய தொற்று 3வது அலையாக அக்டோபருக்குள் தாக்கும் என்று விஞ்ஞானிகள் கணித்து இருந்தனர். அதன்படி 3வது அலை தாக்கவில்லை. இந்நிலையில், தென்னாப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் ஒமிக்ரான் தொற்றாக மீண்டும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

இந்நிலையில் வருகிற பிப்ரவரிக்குள் ஒமைக்ரான் தொற்றுடன் 3வது அலை உச்சத்தை எட்டும் என்று கொரோனா கணிப்பு வியூக நிபுணரும், இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவன விஞ்ஞானியுமான மனிந்திரா அகர்வால் எச்சரித்து உள்ளார்.

அவரது, கணிப்பு படி தற்போதைய புதிய வைரசுடன் வருகிற பிப்ரவரிக்குள் 3வது அலை உச்சத்தை எட்டும். அப்போது நாட்டில் தினமும் 1 லட்சம் முதல் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்படலாம். ஆனால் இது 2வது அலையை விட மிதமானதாகவே இருக்கும்.

தற்போதைய புதிய மாறுபாடு அதிக பரவும் தன்மையை கொண்டது போல் தெரிகிறது. ஆனால் அதன் தீவிரம் டெல்டா மாறுபாட்டில் காணப்படுவது போல் இல்லை. இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் தொற்று பரவலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.

தற்போது வரை இந்த தொற்று தென் ஆப்பிரிக்காவில் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்யவில்லை. ஆனால் அங்கு தொற்று பரவல் மற்றும் மருத்துவமனைகளில் நோயாளிகள் சேர்க்கை போன்ற தரவுகள் நமக்கு தெளிவான பிம்பத்தை தரும் என தெரிவித்துள்ளார்.

Views: - 217

0

0