இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா தொற்று: 111 நாட்களில் இல்லாத அளவுக்கு ஒருநாள் பாதிப்பு சரிவு..!!

6 July 2021, 10:48 am
coronavirus_india_updatenews360
Quick Share

புதுடெல்லி: கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்குநாள் குறைந்து வருகிறது.

கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்குநாள் குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 43 ஆயிரத்து 71 பேருக்கு தொற்று பாதித்து இருந்தது. நேற்று 39 ஆயிரத்து 796 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த 111 நாட்களில் இல்லாத அளவாக ஒரு நாள் கொரோனா பாதிப்பு 34,703 ஆக குறைந்துள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 64 ஆயிரத்து 357 ஆக சரிந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 51,864 ஆக உள்ளது.

கொரோனா மீட்பு விகிதம் 97.17 % ஆக உள்ளது. தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 2.11 சதவிகிதமாக உள்ளது. கடந்த 15 தினங்களாக தொற்று பாதிப்பு விகிதம் 3 சதவீதத்திற்கும் கீழ் பதிவாகி வருகிறது.

Views: - 137

0

0