ஒரு கிலோ வெங்காயம் 25 ரூபாய் தானா? முண்டியடித்த மக்கள்..!மத்திய அமைச்சர் நிர்மலாவுக்கு டேக் செய்த நபர்..!!(வீடியோ)

5 December 2019, 8:10 pm
Onion Crowed- updatenews360
Quick Share

ஆந்திரா : ஒரு கிலோ வெங்காயம் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதை கேள்விப்பட்டதும் பொதுமக்கள் அடித்துக்கொண்டு வாங்க முற்பட்டுள்ள காட்சி வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியா முழுவதும் வெங்காயத் தட்டுப்பாட்டால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். நாளுக்கு நாள் வெங்காயத்தின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உள்ளதால் சமையலில் வெங்காயத்தை பயன்படுத்தாமல் திண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் ஆந்திராவில் ஒரு கிலோ வெங்காயம் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதைக் கேள்விப்பட்ட மக்கள் அடித்துக்கொணடு வாங்க கூட்டம் கூட்டமாக வாங்க முற்பட்டுள்ள காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் இந்த வீடியோவை பால் உமன் என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் மத்திய அமைச்சர் நிர்மலாவை சாடி குறிப்பிட்டுள்ளார். தாங்கள் வேண்டுமானால் வெங்காயத்தை சாப்பிடாமல் இருக்கலாம், ஆனால் சாதாரண மக்கள் ஒரு கிலோ வெங்காயம் 25 ரூபாய் என கேள்விப்பட்டதும் வெகு நேரம் காத்திருந்து முண்டியடித்து வாங்குவதை பாருங்கள் என டேக் செய்துள்ளார்.