ஐயப்பன் கோவில் மண்டல பூஜை: ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்..!

1 November 2020, 3:08 pm
Sabarimalai Closed- updatenews360
Quick Share

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை காலத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்பவர்கள், 14ம் தேதி வரை தனி நபராகவோ அல்லது குழுவாகவோ ஆன்லைன் பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாள் ஒன்றுக்கு 1000 பக்தர்களும், சனி, ஞாயிறுகளில் 2,000 பக்தர்களும் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. www.sabarimalaonline.org என்ற இணையதளத்தில் ஆதார் எண், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஏதேனும் ஒரு ஆவணத்தை கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

கோவில் நடை 15ம் தேதி திறக்கப்பட்டு 16ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும், 41 நாட்கள் மண்டலபூஜை நிறைவுக்கு பிறகு டிசம்பர் 27ல் கோவில் நடை சாத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

Views: - 13

0

0