சபரிமலை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு துவக்கம்

Author: Udhayakumar Raman
14 October 2021, 7:53 pm
Sabaraimalai - Updatenews360
Quick Share

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை தரிசனத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கான ஆன்லைன் முனபதிவு துவங்கியது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக வரும் நவம்பர் 15ம் தேதி மாலை நடை திறக்கப்படுகிறது. நவம்பர் 16ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவர்.கடந்த ஆண்டு கொரோனா பொது முடக்கத்தால் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காலங்களில் 500 முதல் 1,000 பக்தர்களே தினசரி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காலங்களில் பம்பையில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பக்தர்கள் சன்னிதானம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் தங்கி செல்ல அனுமதி இல்லை. மேலும் பக்தர்கள் வழக்கம்போல சபரிமலையின் ‘sabarimalaonline.org’ என்ற அதிகாரபூர்வ இணைய தளத்தில் முன்பதிவு செய்யலாம் என திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டு அறிவித்துள்ளது. மேலும் அதற்கான முன்பதிவும் துவங்கியுள்ளது.

Views: - 195

0

0