திறந்தவெளியில் ஆன்லைன் வகுப்பு : கல்லூரி மாணவரை தாக்கிய சிறுத்தை

Author: Aarthi
4 October 2020, 9:57 am
gujart tiger - updatenews360
Quick Share

குஜராத் மாநிலத்தில் வனப்பகுதியில் உள்ள கிராமத்தில் இணைய வசதிக்காக திறந்தவெளியில் ஆன்லைன் வகுப்பு பயின்ற மாணவரை சிறுத்தை தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் தாப்பி மாவட்டத்தின் வனப்பகுதியில் கப்பாட்டியா கிராமம் உள்ளது. இங்குள்ள மாணவர்கள் இணைய வசதிக்காக ஒரு மலைக்குன்றில்தான் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில் சங்காத் தாலூகாவில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர் கோவிந்த் என்பவர் அந்த மலைக்குன்றில் தன் நண்பருடன் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொண்டுள்ளார்.

அப்போது அந்த பகுதிக்கு சிறுத்தை ஒன்று வந்துள்ளது. சிறுத்தையை கண்ட மாணவர்கள் தப்பி ஓடியள்ளனர். கோவிந்த் தன்னை தற்காத்து கொள்வதற்குள்ளாக சிறுத்தை மாணவரை இடது கை மற்றும் கால்களை பலமாக தாக்கியுள்ளது. அதனைக் கண்டு அதிர்ந்துபோன மற்றொரு மாணவர், கிராமத்தினரை அழைக்க விரைந்துள்ளான்.

கிராம மக்களின் சத்தம் கேட்டு சிறுத்தை அங்கிருந்த புதருக்குள் சென்று மறைந்தது. பின்னர் மாணவர் கோவிந்தை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி மார்ட்டினா காமிட் கூறுகையில், சிறுத்தையை பிடிக்க 2 கூண்டுகள் அமைக்கப்பட்டு இருப்பதாக தெரவித்துள்ளார். மேலும் கிராமத்தை சுற்றி அடந்ந்த வனப்பகுதி இருப்பதால் அவை சிறுத்தைக்கு பாதுகாப்பான இடமாக இருப்பதால் அவை இங்கு வருகின்றன என தெரிவித்துள்ளார்.

Views: - 48

0

0