2 கோடி வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருட்டு..! பிக்பாஸ்கெட் நிறுவனம் ஷாக்..!

9 November 2020, 1:24 pm
Big_Basket_UpdateNews360
Quick Share

முன்னணி ஆன்லைன் உணவு மற்றும் மளிகைக் கடை நிறுவனமான பிக்பாஸ்கெட், நேற்று தனது வாடிக்கையாளர் தரவுகள் திருடப்பட்டதை ஒப்புக் கொண்டுள்ளது. 

இது தொடர்பாக பெங்களூரு சைபர் கிரைம் செல்லில் புகார் அளித்துள்ள பிக்பாஸ்கெட், குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதில் உறுதியாக உள்ளதாக தெரிவித்துள்ளது.

இருப்பினும், பெங்களூரு சைபர் செல் புகாரைப் பெற்றதை உறுதிப்படுத்தவில்லை. சீன இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபா குழுமம், மிரா அசெட்-நேவர் ஆசியா வளர்ச்சி நிதியம் மற்றும் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு சொந்தமான சிடிசி குழு ஆகியவை பிக்பாஸ்கெட்டில் முதலீடு செய்துள்ள நிறுவனங்களாகும்.

“வாடிக்கையாளர்களின் ரகசியத்தன்மை ஒரு முன்னுரிமையாக இருப்பதால், கிரெடிட் கார்டு எண்கள் உட்பட அவர்களின் நிதித் தரவை நாங்கள் சேமிக்க மாட்டோம். அது பாதுகாப்பாக உள்ளது என்று நம்புகிறோம்” என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிக்பாஸ்கெட் நிறுவனம் ஒரு வலுவான தகவல் பாதுகாப்பு கட்டமைப்பைக் கொண்டுள்ளது என்று கூறியதோடு, மின்னஞ்சல் ஐடிகள், தொலைபேசி எண்கள், ஆர்டர் விவரங்கள் மற்றும் முகவரி ஆகியவற்றை மட்டுமே பராமரிப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட மூன்றாம் தரப்பு இணைய உளவுத்துறை நிறுவனம் சைபிள் தனது அதிகாரப்பூர்வ வலைப்பதிவில், அக்டோபர் 14’ஆம் தேதி இந்த தகவல் திருட்டு நடந்ததாகக் கூறப்பட்டாலும், அதை அக்டோபர் 30’ஆம் தேதி கண்டறிந்து, அக்டோபர் 31’ஆம் தேதி அதை சரிபார்த்து, நவம்பர் 1’ஆம் தேதி பிக்பாஸ்கெட்டுக்கு அறிவித்ததாகக் கூறியுள்ளது.

பிக்பாஸ்கெட் நாடு முழுவதும் 25 நகரங்களில் சேவைகளை வழங்குகிறது. ஆண்டு முழுவதும் 1,000 பிராண்டுகளிலிருந்து 18,000 தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது.

“கொரோனா ஊரடங்கு, சமூக இடைவெளி மற்றும் தொற்றுநோய் பயம் போன்ற காரணங்களால் ஏப்ரல் முதல் உணவு மற்றும் மளிகை பொருட்களுக்கான ஆன்லைன் ஷாப்பிங் வியத்தகு முறையில் அதிகரித்துள்ளது” என்று வலைப்பதிவில் சைபிள் மேலும் கூறியுள்ளது.

“எங்கள் இருண்ட வலை கண்காணிப்பின் போது, ​​எங்கள் ஆராய்ச்சி குழு பிக்பாஸ்கெட்டின் தரவுத்தளத்தை சைபர் கிரைம் சந்தையில் 40,000 டாலருக்கு விற்பனைக்குக் வைக்கப்பட்டது.” என்று அது மேலும் கூறியது.

பெயர்கள், மின்னஞ்சல் ஐடிகள், கடவுச்சொல் ஹாஷ்கள், பின் எண்கள், தொடர்பு எண்கள், முகவரிகள், பிறந்த தேதி, இருப்பிடம் மற்றும் உள்நுழைவின் ஐபி முகவரிகளுடன் பயனர் தரவுத்தளம் என சுமார் 20 மில்லியன் நபர்களுடைய தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

Views: - 22

0

0