கள்ளக்காதலியுடன் காரில் “தோசை”யும் கையுமாக மனைவியிடம் மாட்டிய கணவன்… அடுத்து நடந்தது என்ன தெரியுமா?

21 January 2021, 8:27 am
Quick Share

கணவன் கள்ளக்காதலியுடன் காரில் அமர்ந்து தோசை சாப்பிட்டபோது கையும் களவுமாக மனைவியிடம் சிக்கியதால், மனைவி தன் கணவனையும் அவரது கள்ளக்காதலியையும் போலீஸ் ஸ்டேஷன் கூட்டிச்சென்ற விவகாரம் சமீபத்தில் நடந்துள்ளது.

உ.பியில் அரசு ஊழியராக பணியாற்றும் ஒருவருக்குத் திருமணமாகிவிட்டது. இருந்தாலும் அவர் வேறு பல பெண்களுடன் ரகசிய உறவு வைத்துள்ளார். இது அரசல்புரசலாக மனைவிக்குத் தெரிந்துள்ளது. இதனால் ஏற்கனவே இவர்கள் இருவருக்குள்ளும் சண்டை நடந்துள்ளது.

இந்நிலையில் கணவன் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது கள்ளக்காதலியுடன் ஒரு கோவிலுக்குச் சென்றுள்ளார். அங்குத் தரிசனம் செய்து விட்டு தனது காருக்கு வந்து அருகில் உள்ள கடையிலிருந்து தனக்கு தன் கள்ளக்காதலிக்கும் சாப்பிட “தோசை” வாங்கி வந்து இருவரும் காருக்குள் அமர்ந்தே சாப்பிட்டுள்ளனர்.

அந்த நேரம் பார்க்க மனைவி அதே கோவிலுக்கு வர , அங்கு தன் கணவர் கார் இருபத்தைப்பார்த்து அருகில் சென்று பார்த்த போது கணவன் தன் கள்ளக்காதலியும் தோசையும் கையுமாக மனைவியும் மாட்டிக்கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி கணவனை அடித்து அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்குள்ள போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் இந்தியாவில் சட்டப்படி 18 வயது நிரம்பிய இருவர் தனிமையில் “சந்தித்துக்கொள்வது” தவறில்லை என்பதால் போலீசார் கணவர் மீது வழக்குப்பதிவு செய்யாமல் எச்சரித்து அனுப்பியுள்ளனர். இது குறித்த செய்தி வெளியாக வேண்டாம் எனக் கணவனும் மற்றும் மனைவியும் விரும்பியதால் அவர்கள் பெயர்கள் இங்குக் குறிப்பிடப்படவில்லை.

Views: - 0

0

0