மத்திய அரசுக்கு எதிராக போட்டி நாடாளுமன்றம்… ராகுல் காந்தி தலைமையில் எதிர்கட்சிகள் முக்கிய ஆலோசனை

Author: Babu Lakshmanan
3 August 2021, 3:18 pm
rahul gandhi - opposition l - updatenews360
Quick Share

டெல்லி : மத்திய அரசுக்கு எதிராக போட்டி நாடாளுமன்றத்தை நடத்துவது தொடர்பாக ராகுல் காந்தி தலைமையில் எதிர்கட்சிகள் முக்கிய ஆலோசனை நடத்தின.

மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த 19ம் தேதி தொடங்கியது. இக்கூட்டத் தொடர் தொடங்கியது முதலே பெகாசஸ் விவகாரம், விவசாயிகள் பிரச்சனை மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை முன்னிறுத்தி கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஒவ்வொரு நாளும் சபை முடங்கி வருகிறது. இதுவரை 12 நாட்கள் நடந்த கூட்டத் தொடரில் ஒருநாள் கூட சரியாக இயங்காத நிலையில், கடும் அமளிக்கு நடுவே முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

எதிர்கட்சிகளின் இந்த செயலினால் ரூ.133 கோடிக்கும் அதிகமான வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக செலுத்துவோர் பணம் வீணடிக்கப்பட்டு உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தலைமையில் இன்று 14 எதிர்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் போட்டி நாடாளுமன்றத்தை வெளியில் நடத்துவது பற்றி விவாதிக்கப்பட்டது. மேலும், பெட்ரோல் – டீசல் விலை உயர்வை கண்டிக்கும் விதமாக, நாடாளுமன்றத்திற்கு எம்.பி.க்கள் சைக்கிளில் செல்வது என்று முடிவு எடுத்தனர்.

அப்போது, கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்க்கு எதிராக நாம் அனைவரும் ஒருங்கிணைந்து வலிமையான இயக்கமாக மாற வேண்டும் என வலியுறுத்தினார்.

இதைத் தொடர்ந்து, எரிபொருள் விலை உயர்வை கண்டித்து ராகுல்காந்தி மற்றும் எதிர்கட்சி தலைவர்கள் நாடாளுமன்றத்திற்கு சைக்கிளில் சென்று தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.

Views: - 385

0

0