டெல்லியில் போராடும் விவசாயிகளை சந்திக்க சென்ற தமிழக எம்.பி.,க்கள்: தடுத்து நிறுத்திய போலீசார்..!!

4 February 2021, 12:11 pm
tn mps at delhi - updatenews360
Quick Share

புதுடெல்லி: டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை சந்திக்க சென்ற திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 2 மாதங்களுக்கு மேலாக டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியரசு தினத்தில் விவசாயிகள் சார்பில், டெல்லியில் நடந்த டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டது. இதனையடுத்து தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பகுதியில் மேலும் விவசாயிகள் அதிகளவு குவிவதை தடுக்கும் விதமாக சிமென்ட் மற்றும் இரும்பு தடுப்புகள், கம்பி வேலிகள், தற்காலிக சுவர் போன்றவற்றால் டெல்லி போலீசார் தடுப்பு ஏற்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் போராடும் விவசாயிகளை சந்திக்க எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் சென்றனர். காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே, அகாலிதளம் சார்பில் ஹர்சிம்ரத் கவுர் பாதல், தேசியவாத காங்கிரஸ் சார்பில் சுப்ரியா சுலே, திரிணமுல் காங்கிரஸ் சார்பில் சுகதா ராய் ஆகியோர் சென்றனர். இந்த குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் கனிமொழி, திருச்சி சிவா, சு.வெங்கடேசன், ரவிக்குமார், திருமாவளவன் உள்ளிட்டோரும் காசிப்பூர் எல்லைக்கு சென்றனர்.

ஆனால், அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் விவசாயிகளை சந்திக்க அனுமதி மறுத்தனர்.விவசாயிகளை எம்.பி.க்கள் சந்தித்தால் பிரச்சனை ஏற்படலாம் என்பதால் போலீசார் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் தமிழக எம்.பி.,க்கள் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியதாவது,

இங்கு 14 தடுப்புகள் அமைத்து விவசாயிகளை சந்திக்க விடாமல் தடுக்கின்றனர். விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க அரசு அடக்குமுறைகளை கையாள்கிறது. இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் இருப்பதை போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. போராட்டத்தில் மனிதஉரிமை மீறப்பட்டுள்ளதால் சர்வதேச சமூகம் கண்டனம் தெரிவிக்கதான் செய்யும். விவசாயிகள் பிரச்னை தொடர்பாக பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்புவோம் என தெரிவித்துள்ளனர்

Views: - 0

0

0