ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு குட்நியூஸ்: பிளான் வேலிடிட்டியை 30 நாட்களாக நீட்டிக்க TRAI உத்தரவு..!!

Author: Aarthi Sivakumar
28 January 2022, 8:58 am
Quick Share

புதுடெல்லி: பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் திட்டங்களின் செல்லுபடியாகும் காலத்தை 30 நாட்களாக நிர்ணயிக்க தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் உத்தரவிட்டுள்ளது.

செல்போன் பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாத திட்டமாக வழங்கப்படும் வவுச்சர்கள் 28 நாட்களாகவே இருக்கின்றன. இதனால் ஆண்டுக்கு 13 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இந்த நிலையில் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் 30 நாள் திட்டம் ஒன்றை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என டிராய் உத்தரவிட்டு உள்ளது. அதன்படி திட்ட வவுச்சர், சிறப்பு டாரிப் வவுச்சர் மற்றும் காம்போ வவுச்சர் ஆகியவற்றில் தலா ஒரு திட்டத்தின் செல்லுபடியாகும் காலத்தை 30 நாட்களாக நிர்ணயிக்க வேண்டும் என டிராய் உத்தரவிட்டு உள்ளது.

இதன் மூலம் ஆண்டுக்கு மேற்கொள்ளும் பிரீபெய்டு ரீசார்ஜ்களின் எண்ணிக்கை 12 ஆக குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Views: - 302

1

0