மோடி மற்றும் அவரது தாயை துஷ்பிரயோகம் செய்து நிகழ்ச்சியை ஒலிபரப்பிய பிபிசி..! இந்தியர்கள் கொதிப்பு..!

3 March 2021, 9:44 pm
PM_Modi_Mother_UpdateNews360
Quick Share

பிபிசி ரேடியோவில் வெளிவந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஒருவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும் அவரது தாயையும் தனிப்பட்ட முறையில் துஷ்பிரயோகம் செய்யும் வகையில் பேசியது இந்தியாவில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

மார்ச் 1’ம் தேதி பிபிசி ஆசிய நெட்வொர்க்கின் பிக் டிபேட் லைவ் ஷோவில், “ஈஸ்ட்எண்டர்ஸில் தலைப்பாகை ஒரு கிரீடம் என்று குறிப்பிடப்படுவதைக் கண்டு பெருமிதம் கொள்கிறீர்களா” என்ற கேள்வியைச் சுற்றி இந்த சம்பவம் நடந்தது. விவாதத்தில் பெரும்பகுதி இங்கிலாந்தில் சீக்கியர்களும் இந்தியர்களும் எதிர்கொள்ளும் இன பாகுபாட்டை மையமாகக் கொண்டதாக இருந்தது.

ஈஸ்ட்எண்டர்ஸ் என்பது 1985’ஆம் ஆண்டு முதல் பிபிசியில் வெளியாகும் ஒரு பிரபலமான தொடர் ஆகும்.

இந்த நிகழ்ச்சியை ஒலிபரப்பியதற்காக சமூக ஊடக பயனர்கள் பிபிசிக்கு எதிராக ஆத்திரத்தை வெளிப்படுத்தினர். பெரிய அளவிலான விமர்சனங்களைத் தொடர்ந்து, அவற்றை அகற்ற மூன்று மணி நேர ஷோவின் பதிவு செய்யப்பட்ட பதிப்பு திருத்தப்பட்டது.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பிபிசி தொகுப்பாளரான பிரியா ராயும் இதற்காக மன்னிப்பு கோரியுள்ளார். “நாங்கள் தொடரும் முன், நிகழ்ச்சியில் விருந்தினர்களால் முன்னர் பயன்படுத்தப்பட்ட சில சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு மீண்டும் மன்னிப்பு கேட்க விரும்புகிறோம்.

இது ஒரு நேரடி நிகழ்ச்சி மற்றும் சர்ச்சைக்குரிய விஷயங்களை நாங்கள் அடிக்கடி விவாதிக்கிறோம். ஆனால் அப்படி பேசுவதற்கு எந்த காரணமும் இல்லை. இருந்தாலும் அதுபோன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டதால், ஏற்பட்ட எந்தவொரு குற்றத்திற்கும் மீண்டும் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், பிரதமர் மோடி மீது அரசியல் ரீதியாக பல விமர்சனங்கள் இருந்தாலும் தனிப்பட்ட முறையில் அவரையும் அவரது தாயையும் துஷ்பிரயோகம் செய்யும் வகையில் பேசியதால், பிபிசியை புறக்கணிக்க அல்லது தடை செய்வதற்கான அழைப்புகள் இந்தியாவில் வலுவடைந்தன. பலர் தங்கள் கோபத்தை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

“பிரதமர் மோடியின் தாயை கேவலமான வார்த்தைகளைப் பயன்படுத்தி பிபிசி எவ்வாறு உள்ளடக்கத்தை நேரடியாக ஒளிபரப்ப அனுமதிக்கும்? இது மிகவும் வலுவான முறையில் கண்டிக்கப்பட வேண்டும்” என்று ஒரு ட்விட்டர் பயனர் குறிப்பிட்டார்.

இதே போல் பலரும் தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Views: - 98

1

0