லவ் ஜிகாத்தை ஊக்குவிக்கும் வகையில் விளம்பரம்..? சர்ச்சையில் சிக்கிய பிரபல நகைக்கடை நிறுவனம்..!

Author: Sekar
13 October 2020, 7:05 pm
Tanisq_Ad_kangana_UpdateNews360
Quick Share

பிரபல நகைக்கடை நிறுவனமான தனிஷ்க், இந்து மருமகளுக்கு இஸ்லாமிய மாமியார் வளைகாப்பு நடத்துவதைப் போன்ற சர்ச்சைக்குரிய விளம்பரம் வெளியிட்டிருந்த நிலையில், அனைத்து தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் வலுத்ததை அடுத்து தனது விளம்பரத்தை நீக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

தனிஷ்க் விளம்பர சர்ச்சை
கடந்த வாரம் வெளியிடப்பட்ட விளம்பரம், ஒரு இரு மத நம்பிக்கை கொண்ட சமூகங்களிடையே நடைபெறும் வளைகாப்பு பற்றியது. சமூக ஊடகங்களில் ஒரு பகுதியினர் இந்த விளம்பரத்தை லவ் ஜிஹாத்தை ஊக்குவிப்பதாக விமர்சித்துள்ளனர். மற்றொரு குழு விமர்சிப்பவர்களை மதவெறி கொண்டவர்கள் என தூற்றினர். 

எனினும், #BoycottTanishq ட்விட்டர் டிரெண்டிங்கில் ஒன்றாக நேற்று வலம் வந்தது. இந்த விளம்பரத்தில் சேலை உடைய கர்ப்பிணிப் பெண், தனது வயதான மாமியாரால் ஒரு வளைகாப்பு விழாவிற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

வீடியோவில், கர்ப்பிணி பெண் வயதான பெண்மணியிடம் “ஆனால் இந்த விழா ஏன் உங்கள் வீட்டில் நடத்தப்படவில்லை.” எனக் கேள்வியெழுப்புகிறார். அதற்கு மாமியார் “ஒவ்வொரு வீட்டிலும் மகள்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பது ஒரு பாரம்பரியம் இல்லையா?” எனக் கூறுகிறார்.

யூடியூப்பில் வெளியான 43 விநாடிகள் கொண்ட இந்த வீடியோவில் இந்துப் பெண் இஸ்லாமியக் குடும்பத்தில் திருமணம் செய்துள்ளதாகவும், பெண் கர்ப்பம் தரித்த பின், அந்த பெண்ணுக்கு தங்கள் வீட்டில் வளைகாப்பு நடத்தாமல் வேறு வீட்டில் நடத்துவதாகக் காட்டப்பட்டுள்ளது.

இது சமூக ஊடகங்களில் கடும் விமர்சனத்துக்கு வழிவகுத்துள்ளது.

பாலிவுட் நடிகை கங்கனா ரனவத் கருத்து

இதற்கிடையில், சமூக ஊடகங்களில் சர்ச்சைக்கு வழிவகுத்த தனிஷ்க் விளம்பரம் குறித்து பாலிவுட் நடிகை கங்கனா ரனவத் கருத்து தெரிவித்துள்ளார். 

“விருப்பத்தை நிறைவேற்றியதைப் போன்ற ஒரு விளம்பரம் அல்ல இது. பயந்த இந்து பெண் தனது நம்பிக்கையை ஏற்றுக்கொண்டதற்காக தனது மாமியாரிடம் மன்னிப்புடன் நன்றி கோருவது போல் உள்ளது. அவர் அந்த வீட்டின் பெண் இல்லையா? ஏன் அவருடைய சொந்த வீட்டில் மிகவும் சாந்தகுணமுள்ள மற்றும் பயந்த சுபாவத்துடன் இருக்கிறார்? இது வெட்கக்கேடானது” என்று ரனவத் ட்வீட் செய்துள்ளார்.

மற்றொரு ட்வீட்டில், கங்கனா பல மட்டங்களில் விளம்பரம் தவறாக இருப்பதாகக் கூறியதோடு, இது லவ் ஜிஹாத் மட்டுமல்ல, பாலியல் உணர்வையும் ஊக்குவிக்கிறது என்று கூறினார்.  

வீடியோ நீக்கம்
இந்த வீடியோ லவ் ஜிகாத் போன்றவைகளை ஊக்குவிப்பதாக தொடர்ந்து புகார் வந்த நிலையில், டைட்டன் நிறுவனத்தின் ஒரு அங்கமான தனிஷ்க், யுடியூபிலிருந்து நீக்கியுள்ளது.

Views: - 59

0

0