பசு பாதுகாப்புக்காக 3 ஆண்டுகளில் 1,500 கோடி ரூபாய் செலவு..! செய்தது ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு..!

6 March 2021, 1:28 pm
cow_updatenews360
Quick Share

கடந்த மூன்று ஆண்டுகளில் பசுக்களின் பாதுகாப்பிற்காக மாநில அரசு ரூ 1,511.31 கோடியை செலவிட்டதாக ராஜஸ்தான் நகர அபிவிருத்தி அமைச்சர் சாந்தி தரிவால் தெரிவித்தார்.

முத்திரை வரி மற்றும் மதுபான விற்பனைக்கு செலுத்த வேண்டிய வாட் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்ட நிதி மாடுகளின் பாதுகாப்புக்காக செலவிடப்பட்டுள்ளது என அமைச்சர் கூறினார்.

பாஜக சட்டமன்ற உறுப்பினர் தரம் நாராயண் ஜோஷியின் துணை கேள்விக்கு மாநில சட்டசபையில் கேள்வி நேரத்தில் பதிலளித்த தரிவால், விதிகளின்படி, கோரிக்கை எழுந்த போதெல்லாம் நிதி அனுமதிக்கப்படுகிறது என்றார்.

சட்டமன்ற உறுப்பினரின் கேள்விக்கு தரிவால் தனது எழுத்துப்பூர்வ பதிலில் சபைக்கு அளித்த பதிலில், மாநில அரசு 2015-16 முதல் 2020-21 வரை ரூ 1,242.56 கோடியை முத்திரைக் கட்டணத்தில் கூடுதல் கட்டணம் மூலம் அரசு பெற்றுள்ளது எனத் தெரிவித்தார்.

மதுபான விற்பனைக்கு செலுத்த வேண்டிய வாட் தொகையில் இருந்து 2018-19 முதல் 2020-21 வரை ரூ 1,017.08 கோடியை அரசு பெற்றது. இதன் மூலம் மொத்தம் ரூ 2,259.64 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது என்றார்.

கூடுதல் கட்டணம் மூலம் வசூலிக்கப்பட்டதில் இருந்து, 1,500.46 கோடி ரூபாய் மாட்டு முகாம்களுக்கான உதவிகளாகவும், பசு தங்குமிடம் மேம்பாட்டு பணிகளுக்கு ரூ 3.44 கோடியும், மாட்டு தங்குமிடம் பயோகாஸ் திட்டத்திற்கு ரூ 20 லட்சமும், நந்திஷாலா திட்டத்திற்கு ரூ 7.20 கோடியும் செலவிடப்பட்டுள்ளன.

இதன் மூலம் மொத்தம் ரூ 1,511.31 கோடி செலவிடப்பட்டுள்ளது என்றார்.\

வழக்கமாக பாஜகவை மாடுகளுக்கான அரசியல் செய்கிறது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர் விமர்சனம் செய்து வரும் நிலையில், ராஜஸ்தானில் உள்ள காங்கிரஸ் அரசு, மாடுகளுக்கான மூன்று வருடத்தில் சுமார் 1500 கோடி ரூபாய் செலவளித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 7

0

0