“அப்போ கோவிஷீல்டு தடுப்பூசி தரமற்றதா”..? மோடி தடுப்பூசி போட்ட பிறகு சந்தேகம் கிளப்பும் அசாதுதீன் ஒவைசி..!

1 March 2021, 3:56 pm
owaisi_covishield_updatenews360
Quick Share

அவசரகால பயன்பாட்டிற்காக டி.ஜி.சி.ஐ ஒப்புதல் அளித்த இரண்டு கொரோனா வைரஸ் தடுப்பூசிகளில் ஒன்றான கோவிஷீல்டின் செயல்திறன் குறித்து ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி சந்தேகம் எழுப்பியுள்ளார். 

ஒவைசி, ஒரு ஜெர்மன் அரசாங்க அறிக்கையை மேற்கோள் காட்டி, கோவிஷீல்ட் 18 முதல் 64 வயதுக்குட்பட்டவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் 64 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இது வேலை செய்யாது என்றும் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

“கோவிஷீல்ட் அல்லது கோவாக்சின் என நாட்டின் ஒவ்வொருவரும் கொரோனா வைரஸ் தடுப்பூசியை எடுக்க வேண்டும். ஆனால் எனக்கு ஒரு கேள்வி உள்ளது.

ஜெர்மன் அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட தரவு 18 முதல் 64 வயதிற்குட்பட்டவர்களுக்கு இது நல்லது என்று தெரிவித்துள்ளதாக அஸ்ட்ராஜெனெகாவின் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது. இது 64 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பயனுள்ளதாக இருக்காது.” என்று அவர் கூறினார்.

அஸ்ட்ராஜெனகா-ஆக்ஸ்போர்டு இணைந்து கண்டறிந்துள்ள கோவிஷீல்டு தடுப்பூசியை இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.  

“பிரதமர் மோடிக்கு ஒரு கோவாக்சின் ஷாட் கிடைத்தது தற்செயல் நிகழ்வாக இருக்கலாம். ஆனால் இந்த குழப்பத்தை நீக்குமாறு நான் அரசாங்கத்திடம் கோர விரும்புகிறேன்” என்று அசாதுதீன் ஒவைசி கூறினார். மேலும் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் தடுப்பூசி வரும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.

கோவாக்சின் என்பது டி.ஜி.சி.ஐ யால் அவசரகால பயன்பாட்டுக்கு வழங்கப்பட்ட இரண்டாவது தடுப்பூசி ஆகும். கோவாக்சின் என்பது ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட பாரத் பயோடெக் உருவாக்கிய ஒரு முழுமையான உள்நாட்டு தடுப்பூசி ஆகும்.

Views: - 43

0

0