2022 உ.பி. சட்டமன்றத் தேர்தலுக்கு இப்போதே வேட்பாளர் அறிவிப்பு..! அதிரடி வியூகம் வகுக்கும் அசாதுதீன் ஒவைசி..!

29 December 2020, 3:33 pm
asaduddin_owaisi_updatenews360
Quick Share

அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி, 20222’ஆம் ஆண்டில் நடைபெற உள்ள உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கான முதல் வேட்பாளரை அறிவித்துள்ளது.

மற்ற கட்சிகளுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், முறையான அறிவிப்புக்காக காத்திருக்காமல் ஏஐஎம்ஐஎம் கட்சி தனது வேட்பாளர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பால்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள உட்ராலா சட்டமன்றத் தொகுதியின் ஏஐஎம்ஐஎம் வேட்பாளராக டாக்டர் அப்துல் மன்னன் எனும் கண் அறுவை சிகிச்சை நிபுணரை ஏஐஎம்ஐஎம் கட்சி அறிவித்துள்ளது.

முன்னதாக சமாதானக் கட்சி எனும் கட்சியிலிருந்த அப்துல் மன்னன், இந்த மாத தொடக்கத்தில் தான் அக்கட்சியிலிருந்து வெளியேறி ஏஐஎம்ஐஎம் கட்சியில் இணைந்தார்.

முன்னதாக கடந்த டிசம்பர் 16’ஆம் தேதி, 2022 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணியை உறுதி செய்ய ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி லக்னோவில் சுஹெல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் (எஸ்.பி.எஸ்.பி) தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பரை சந்தித்தார்.

ஒரு நாள் கழித்து, பிரகதிஷீல் சமாஜ்வாடி கட்சி லோஹியா (பி.எஸ்.பி.எல்) தலைவர் சிவ்பால் சிங் யாதவ் ராஜ்பரை சந்தித்து கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைக்கு மத்தியில், ஏஐஎம்ஐஎம் தனது முதல் வேட்பாளர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

Views: - 6

0

0