ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் விலை 1,000 ரூபாய்..! சீரம் நிறுவன சிஇஓ அறிவிப்பு..!

20 November 2020, 1:52 pm
Corona_Vaccine_UpdateNews360
Quick Share

ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி 2021 பிப்ரவரி மாதத்திற்குள் இந்தியாவில் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முதியோர்களுக்கு கிடைக்கக்கூடும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா தெரிவித்துள்ளார்.

மேலும் ஏப்ரல் மாதத்திற்குள் பொது மக்களுக்கு தடுப்பூசி போடலாம் என்று அவர் கூறினார். இந்த தடுப்பூசிக்கு அதிகபட்சமாக ரூ 1,000 விலை இருக்கும் என அவர் கூறினார்.

“எல்லாமே திட்டத்தின் படி நடந்தால், அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதத்திற்குள் தடுப்பூசி பொது மக்களுக்கும் கிடைக்கும்” என்று அவர் கூறினார். மேலும் 2024’க்குள் ஒவ்வொரு இந்தியருக்கும் தடுப்பூசி போடப்படும் என்றார்.

ஒட்டுமொத்த மக்களும் தடுப்பூசி போடுவதற்கு இரண்டு-மூன்று ஆண்டுகள் ஆகும் என்று அவர் விளக்கினார். ஆனால் “உங்களுக்கு பட்ஜெட், தடுப்பூசி, தளவாடங்கள், உள்கட்டமைப்பு தேவை, பின்னர் மக்கள் தடுப்பூசி எடுக்க தயாராக இருக்க வேண்டும். அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் காலக்கெடு 2024’ஆக இருக்கும்.” என்று பூனவல்லா கூறினார்.

தடுப்பூசியின் விலை குறித்து பேசிய அவர், ஒரு டோஸுக்கு 5-6 அமெரிக்க டாலர் வரை இருக்கும் என்றும் இரண்டு டோஸ்களுக்கும் சுமார் 1,000 ரூபாய் எம்ஆர்பி இருக்கும் என்றும் தெரிவித்தார். அரசாங்கம் ஒரு பெரிய அளவை வாங்குவதால் அதை மலிவாகப் பெற முடியும் என்று அவர் கூறினார். “நாங்கள் இன்று சந்தையில் உள்ள மற்ற தடுப்பூசிகளை விட மிகவும் மலிவான விலை நிர்ணயம் செய்கிறோம்” என்று பூனவல்லா கூறினார்.

தடுப்பூசியின் செயல்திறனைப் பற்றி பேசிய பூனவல்லா, ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி இதுவரை மிகச் சிறப்பாக செயல்படுவதை நிரூபித்து வருகிறது என்று கூறினார். 
தற்போது, எஸ்ஐஐ மற்றும் ஐசிஎம்ஆர் ஆகியவை நாடு முழுவதும் 15 வெவ்வேறு மையங்களில் தடுப்பூசியின் இரண்டாம் கட்டம் மற்றும் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையை நடத்தி வருகின்றன.

Views: - 23

0

0

1 thought on “ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் விலை 1,000 ரூபாய்..! சீரம் நிறுவன சிஇஓ அறிவிப்பு..!

Comments are closed.