பாக்., வெற்றியைக் கொண்டாடிய கல்லூரி மாணவர்கள் கைது… வாட்ஸ்அப் Status-ஆல் பள்ளி ஆசிரியை மீது பாய்ந்த தேசத்துரோக வழக்கு!!!

Author: Babu Lakshmanan
28 October 2021, 4:34 pm
pakistan victory celebrate - arrest - - updatenews360
Quick Share

உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய கல்லூரி மாணவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

டி20 உலகக் கோப்பை போட்டியின் சூப்பர்12 சுற்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த குரூப்2 பிரிவில் பாகிஸ்தான் அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பெறும் முதல் வெற்றி இதுவாகும். எனவே, இந்த வரலாற்று வெற்றியை அந்நாட்டு மக்கள் கொண்டாடினர்.

இதனால், இந்தியா-பாகிஸ்தான் ரசிகர்கள் இடையே சமூக வலைதளங்களில் வார்த்தைப்போர் தற்போதும் ஓய்ந்த பாடில்லை. இதனிடையே, காஷ்மீரில் இந்திய அணியின் தோல்வியை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலானது. அந்த வீடியோவில், மருத்துவக்கல்லூரி விடுதியில் திரண்டிருந்த மாணவ, மாணவிகள் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியடைந்ததை படுஜோராக கொண்டாடிய வீடியோவை இந்திய ரசிகர்கள் பலரும் விமர்சித்துள்ளனர்.

ஸ்ரீநகரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் சவுராவில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மாணவர்கள் பட்டாசு வெடித்தும், பாகிஸ்தானின் தேசிய கீதத்தை பாடியும் கொண்டாடியுள்ளனர். இது தொடர்பாக மாணவர்கள் சிலர் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. இதன்மூலம், குற்றம்சாட்டப்படும் மாணவர்கள் அரசு பணிகளில் சேர்வதற்கு தடை விதிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி, அர்ஷீத் யூசுப், இனாயத் அல்தஃப் ஷேக் ஆகியோர் மூன்றாம் ஆண்டும், சவுகத் அகமது கனாய் என்ற மாணவர் நான்காம் ஆண்டும் படித்து வரும் மாணவர்கள் மூவரும் கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பின்னர், அவர்களை கைது செய்த போலீசார், ஜக்தீஷ்புரா காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மத மோதலை தூண்டும் விதமாக செயல்பட்டது, 2008 ஐடி சட்டப்பிரிவு, சைபர் தீவிரவாதம் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் மீது தேச துரோக பிரிவும் சேர்க்கப்படும் என தெரிகிறது.

இதேபோல, டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடி வாட்ஸ்அப்பில் பதிவிட்ட ஆசிரியை பணிநீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், அவர் கைது செய்யும் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 269

0

0