பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதல்..! இந்திய ராணுவம் பதிலடி..!

1 November 2020, 12:35 pm
indian_army_updatenews360
Quick Share

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ஷாப்பூர், கிர்னி மற்றும் கஸ்பா செக்டர்களில் இன்று காலை பாகிஸ்தான் படைகள் மீண்டும் போர்நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்தியுள்ளன.

பாகிஸ்தான் வீரர்கள் அறிவிக்கப்படாத யுத்த நிறுத்த மீறலை காலை 7.30 மணியளவில் ஷாப்பூர், கிர்னி மற்றும் கஸ்பா செக்டர்களில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் சிறிய ஆயுதங்களுடன் துப்பாக்கிச் சூடு மற்றும் மோட்டார் கொண்டு ஷெல் மூலம் தாக்குதல் நடத்தினர். பாகிஸ்தானின் யுத்த நிறுத்த மீறல் மற்றும் ஷெல் தாக்குதல்களுக்கு இந்திய இராணுவம் கடும் பதிலடி கொடுத்து வருகிறது.

செக்டரிலும் பாகிஸ்தான் வீரர்கள் போர்நிறுத்தத்தை மீறியுள்ளனர். பாகிஸ்தான் படைகள் நேற்று இரவு 10 மணிக்கு யுத்த நிறுத்த மீறலைத் தொடங்கியதாகவும், இன்று காலை 5 மணி வரை துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்ததாகவும் அறியப்படுகிறது. பாகிஸ்தான் படைகள் பொதுமக்கள் பகுதிகளை குறிவைக்க மோட்டார் ஷெல் குண்டுகளை பயன்படுத்தின.

நேற்று, ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்திலும் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக்கோட்டு பகுதியில் உள்ள கிராமங்கள் மீது துப்பாக்கிச் சூட்டை மேற்கொள்வதன் மூலம் பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் போர்நிறுத்தத்தை மீறியுள்ளனர்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலிருந்து, தீவிரவாதிகளை இந்திய பகுதிக்குள் ஊடுருவ வைக்கும் முயற்சியாக இது போன்ற தாக்குதல்கள் பாகிஸ்தான் ராணுவத்தால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்திய ராணுவம் அதிகள் விழிப்புணர்வுடன் அனைத்தையும் முறியடித்து வருகிறது.

Views: - 21

0

0

1 thought on “பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதல்..! இந்திய ராணுவம் பதிலடி..!

Comments are closed.