“மகாராஷ்டிரா போலீஸ் மீது நம்பிக்கையில்லை”..! பால்கர் சாதுக்கள் கொலை வழக்கிலும் சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை..!

3 September 2020, 7:54 pm
Palghar_Lynching_UpdateNews360
Quick Share

மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் கிராமவாசிகள் காரில் வந்த இரண்டு சாதுக்கள் மற்றும் அவர்களது டிரைவர் கொலை செய்யப்பட்டு கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்குப் பிறகு, இறந்த சாதுக்களில் ஒருவரின் தாய், இறப்பு தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 16’ஆம் தேதி இரவு, கொரோனா வைரஸ் ஊரடங்கின் போது, ஒரு இறுதி சடங்கிற்காக மும்பையிலிருந்து சூரத்துக்கு செல்லும் வழியில் கல்பாவ்ரிக்ஷகிரி மகாராஜ், அவரது உதவியாளர் சுஷில்கிரி மகாராஜ் மற்றும் அவர்களின் ஓட்டுநர் நிலேஷ் தெல்கேட் ஆகியோர் ஒரு கும்பலால் தடுத்து நிறுத்தப்பட்டு அடித்துக் கொல்லப்பட்டனர்.

சுமார் 800’க்கும் மேற்பட்ட கிராமவாசிகள் மற்றும் பழங்குடியினரைக் கொண்ட ஒரு பெரிய கும்பல் அவர்களை குச்சிகள், கற்கள் மற்றும் அரிவாளால் தாக்கியது. மூவரும் கடுமையான காயங்களுக்கு ஆளாகி இறந்த நிலையில், இந்த விவகாரம் நாடு தழுவிய அளவில் கடும் கண்டனத்திற்கு உள்ளானது.

இந்த வழக்கு பின்னர் மாநில குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் விளைவாக தஹானு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மூன்று குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன.

மாநில குற்றப்புலனாய்வுத் துறை விசாரித்து இந்த வழக்குத் தொடர்பாக குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்துள்ளது. மேலும் இந்த வழக்கில் அலட்சியாக செயல்பட்ட காவல் துறையினர் சிலரை பணியிலிருந்து நீக்கியுள்ளது.

இந்நிலையில் மகாராஷ்டிரா காவல்துறை மீது அவநம்பிக்கையை வெளிப்படுத்திய அவர், சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கைப் போலவே இந்த வழக்கையும் மத்திய விசாரணை நிறுவனத்திற்கு மாற்றுமாறு மாநில அரசிடம் கேட்டுக்கொண்டார்.

“நாங்கள் மகாராஷ்டிரா போலீஸை நம்பவில்லை.  சுஷாந்த் வழக்கு மாற்றப்பட்டதைப் போலவே இந்த வழக்கையும் சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இதுவே நாங்கள் அரசாங்கத்திடம் வைக்கும் ஒரே கோரிக்கை.” எனத் தெரிவித்துள்ளார்.

Views: - 0

0

0