பால்கர் சாதுக்கள் கொலை வழக்கு..! மேலும் 24 பேரைக் கைது செய்தது சிபிசிஐடி போலீஸ்..!

22 October 2020, 10:57 am
Palghar_Mob_Lynching_UpdateNews360
Quick Share

கொடூரமான பால்கர் சாதுக்கள் கொலை வழக்கு தொடர்பாக மகாராஷ்டிரா காவல்துறை குற்றப் புலனாய்வுத் துறை நேற்று மேலும் 24 பேரை கைது செய்தது.

கொரோனா ஊரடங்கு நாடு முழுவதும் அமலில் இருந்த நேரத்தில், சூரத்தில் நடந்த இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள சாதுக்கள் சென்று கொண்டிருந்தபோது, ​​அவர்கள் அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த குழந்தை தூக்குபவர்கள் என்ற வதந்திகளின் அடிப்படையில் ஒரு கும்பல் அவர்களைத் தாக்கியது.

போலீஸ் கண்முன்னே நடந்த இந்த தாக்குதலில், இரண்டு சாதுக்கள் மற்றும் காரை ஓட்டிச் சென்ற டிரைவர் என மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  

கடந்த ஏப்ரல் 16’ம் தேதி நடந்த சம்பவம் தொடர்பாக இதுவரை மூன்று எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு சம்பந்தப்பட்ட காவல்துறை ஊழியர்கள் மீது மாநில அரசு நடவடிக்கை எடுத்தது.

புதிய கைதுகளுடன், இந்த வழக்கு தொடர்பாக இரண்டு சிறுவர்கள் உட்பட மொத்தம் 128 பேர் இப்போது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் மொத்தம் 208 புதிய குற்றவாளிகளை மாநில சிஐடி பெயரிட்டுள்ளது.

“இது வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையை 11 சிறுவர்கள் உட்பட 366’ஆக உயர்த்தியுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் இன்று தஹானு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்” என்று சிஐடி வழக்கறிஞர் அம்ருத் ஆதிகாரி தெரிவித்தார்.

மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களில் 62 பேரின் ஜாமீன் மனுவையும் சிறப்பு அமர்வு நீதிபதி பிபி ஜாதவ் இன்று தானே செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரிக்க உள்ளார். குற்றம் சாட்டப்பட்ட 366 பேரில், 28 பெரியவர்கள் மற்றும் 9 சிறுவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Views: - 27

0

0