மார்ச் 31க்கு பிறகு பான் கார்டு செல்லாது…! என்ன காரணம் தெரியுமா…?

15 February 2020, 10:45 am
PAN CARD-UPDATENEWS360
Quick Share

டெல்லி: ஆதாருடன் இணைக்கப்படாவிட்டால் மார்ச் 31க்கு பிறகு பான் கார்டு செல்லாது என்று வருமானவரித்துறை அதிரடியாக அறிவித்துள்ளது.

பான் கார்டு மற்றும் ஆதார் இணைப்பதற்கான காலக்கெடுவை மத்திய அரசானது பல முறை நீட்டித்து இருக்கிறது. இப்போது நீட்டிக்கப்பட்ட சலுகையும் வரும் மார்ச்சுடன் முடிகிறது.

இந் நிலையில் மார்ச் 31க்கு பின்னர் ஆதாருடன் இணைக்கப்படாத பான் கார்டுகளுக்குரியவர்கள் மீது பான் எண்ணை குறிப்பிடாதது, பயன்படுத்தாது போன்றவற்றுக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

அந்த தேதிக்குள் ஆதாரை பான்கார்டுடன் இணைத்தால்  மீண்டும் பான் கார்டு எண்ணை பயன்படுத்தலாம். கடந்த மாதம் 27ம் தேதி வரை 30.75 கோடிக்கும் அதிகமான பான் கார்டுகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளது.

17.58 கோடி பான் கார்டுகள்  இன்னும் ஆதாருடன் இணைக்கப்படவில்லை. 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பளித்தது. அதில், ஆதார் அரசியலமைப்பு ரீதியாக செல்லுபடியாகும்.

வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்வதற்கும், பான் கார்டுகளை ஒதுக்குவதற்கும் பயோமெட்ரிக் அடையாளம் கட்டாயம் தேவை என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.

Leave a Reply