கார் வாங்க குழந்தையை விற்ற பெற்றோர்: போலீசில் மாட்டிவிட்ட குழந்தையின் தாத்தா..!!

15 May 2021, 7:06 pm
car buy - updatenews360
Quick Share

உத்தரபிரதேசம்: சொந்த கார் வாங்குவதற்காக தங்களுடைய மூன்று மாத குழந்தையை ஒன்றரை லட்சத்துக்கு விற்பனை செய்த பெற்றோர் குறித்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்த குழந்தையை அவரது வீட்டிற்கு அருகில் உள்ள தொழில் அதிபர் ஒருவர் கேட்டதை அடுத்து ஒன்றரை லட்சத்துக்கு குழந்தையின் பெற்றோர் விற்பனை செய்துள்ளனர்.

இந்த பணத்தை வைத்து அந்த தம்பதியினர் கார் வாங்கியுள்ளதாக தெரிகிறது. இது குறித்து குழந்தையின் தாத்தா அளித்துள்ள புகாரின் அடிப்படையில் குழந்தையை விற்பனை செய்த பெற்றோரிடம் போலீசார் விசாரணை செய்தபோது கார் வாங்குவதற்காக குழந்தையை விற்றது உறுதி செய்யப்பட்டது

இதனை அடுத்து குழந்தையின் பெற்றோர்கள் மற்றும் தொழிலதிபரிடம் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சொந்த கார் வாங்குவதற்காக சொந்த குழந்தையை விற்பனை செய்த பெற்றோர் குறித்த தகவல் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 180

0

0