விமான பயணிகள் புகைப்படம், வீடியோ எடுக்க தடை: மத்திய அரசு அறிவிப்பு

12 September 2020, 4:57 pm
Quick Share

பயணிகள் விமானம் புறப்படும்போதோ அல்லது தரையிரங்கும்போதோ புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் 30 சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான போக்குவரத்து நிலையங்கள் உள்ளன. இங்கிருந்து வெளி நாடுகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் மற்றும் வெளி நாடுகளில் இருந்து இங்கு வருவதும் என நாள் தோறும் ஏராளமான பயணிகள் வான் வழி ஊர்தியை பயன்படுத்துகின்றனர்.

அந்த நேரங்களில் பயணிகள் விமானத்தில் ஏறியவுடன் தங்கள் ஸ்டேடசை தெரிவிக்க விமானம் புறப்படும்போதும், தரையிரங்கும்போதும் வீடியோ எடுத்து மகிழ்கின்றனர். இதனால், பாதுகாப்பு கேள்வி குறியாகும் சூழல் உருவாகும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

இந்த சூழலில் மத்திய அரசு இது குறித்து இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நாடு முழுவதும் விமான நிலையங்களில் இருந்து விமானங்கள் புறப்படும்போதோ அல்லது தரையிரங்கும்போது புகைப்படம், வீடியோ எடுக்க கூடாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பயணிகள் மத்திய அரசின் விதியை மீறி செயல்பட்டால் குறிப்பிட்ட அந்த வழித்தடத்தில் 2 வரகாத்திற்கு அந்த விமானத்தை இயக்க தடை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ள மத்திய அரசு, விமான இயக்குநரகத்திடம் சிறப்பு அனுமதி பெற்றபிறகு புகைப்படமோ, வீடியோவோ எடுக்கலாம் என அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து அனைத்து விமான நிறுவனங்களுக்கும் விமான போக்குவரத்து இயக்குநரகம் கடிதம் வயிலாக தகவல் அளித்துள்ளது.

Views: - 4

0

0