அப்புறம் எனக்கு பசிக்கும்ல… வழக்கு விசாரணையின் போது உணவு சாப்பிட்ட வக்கீல்!

7 March 2021, 4:54 pm
Quick Share

பீகார் மாநிலத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிமன்ற விசாரணை நடந்த போது, வக்கீல் ஒருவர் உணவு சாப்பிட்ட வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

வீட்டிலிருந்து வேலை செய்பவர்கள், மீட்டிங்கில் கலந்து கொள்ள ஜூம் அழைப்புகள் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துவிட்டது. கொரோனா காலத்தில் வீடியோ கான்பரன்சிங் அழைப்புகள் இன்றியமையாததாக அமைந்து விட்டது. ஆனால், சாதாரண காரியங்களை செய்யும் போது அதிலிருந்து மாறுபட்டு ஏதேனும் நடந்தால், அது உலகத்தாரால் கவனிக்கப்படும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சிறந்த உதாரணம்.

மயூர் சேஜ்பால் என்ற டுவிட்டர் பயனர் ஒருவர் ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் பாட்னா உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த வக்கீ்ல் ஒருவர், தனது மதிய உணவை சாப்பிடுவதில் மும்முரமாக இருக்கிறார். ஆனால் தனது வீடியோவை அப்போது அவர் ஆஃப் செய்யவில்லை. தான் ஆன்லைனில் இருக்கிறோம் என்பதும் அப்போது அவருக்கு தெரியவில்லை. இந்த வீடியோ கான்பரன்சிங் விசாரணையை, மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா நடத்தினார்.

கத்திரசால் ராஜ் என்ற அந்த வக்கீல் ஆன்லைனில் சாப்பிடுவது தெரிந்து, துஷார் மேத்தா அவரை மொபைலில் அழைத்து தெரியப்படுத்த, அந்த வக்கீல் தனது தட்டை மறைத்து கொண்டார். தொடர்ந்து அவர் வழக்கில் கவனம் செலுத்தினார். இந்த வீடியோவை இதுவரை 63 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர். சிரிப்பு எமோஜிகளை நெட்டிசன்கள் தெறிக்கவிட, இது வைரலாக பரவி வருகிறது.

Views: - 24

0

0