பெகாசஸ் விவகாரத்தில் நீதி விசாரணை வேண்டும் : நாடாளு., வளாகத்தில் எதிர்கட்சிகள் போராட்டம்

Author: Babu Lakshmanan
23 July 2021, 11:10 am
delhi protest - updatenews360
Quick Share

பெகாசஸ் விவகாரத்தில் நீதி விசாரணை நடத்தக்கோரி நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.

பெகாசஸ் சாப்ட்வேர் மூலம் அரசியல் தலைவர்கள், பத்திரிக்கையாளர்களின் செல்போன் உரையாடல் ஒட்டுக் கேட்கப்பட்டதாக மத்திய அரசின் மீது குற்றம்சாட்டி, நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், இரு அவைகளும் தொடர்ந்து முடங்கி வருகின்றன.

நேற்று பெகாசஸ் விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்க முயன்ற தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவின் கையில் வைத்திருந்த கோப்புகளை கிழித்தும் எதிர்கட்சியினர் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

இந்தநிலையில், இன்று நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக வந்த எதிர்கட்சியினர், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, பெகாசஸ் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, காங்கிரஸ் மற்றும் சிவசேனா உள்ளிட்ட எதிர்கட்சிகளின் எம்பிக்கள் பங்கேற்றனர்.

Views: - 192

0

0