மம்தாவுக்கு டாட்டா காட்ட மக்கள் தயார்..! மேற்கு வங்கத்தில் பாஜக தலைவர் நட்டா சரவெடி..!

6 February 2021, 2:49 pm
bjp_nadda_updatenews360
Quick Share

ஏப்ரல்-மே மாதங்களில் மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இன்று மேற்குவங்கத்தின் மால்டாவில் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மக்கள் அனைவரும் டாட்டா காட்டி அனுப்பி வைப்பார்கள் என்று கூறினார்.

இரண்டு நாள் பயணத்திற்காக நேற்று இரவு மால்டாவிற்கு சென்ற நட்டா, மேற்கு வங்கத்தில் பிரதமர் கிசான் திட்டத்தை செயல்படுத்தாமல், தனது ஈகோ அரசியலுக்காக  விவசாயிகளை பலிகடா ஆக்குவதாக விமர்சித்தார்.

“மம்தா தீதி இங்குள்ள விவசாயிகளுக்கு அநீதி இழைத்துள்ளார். அவர் தனது பிடிவாதம், ஈகோ மற்றும் ஆணவத்தில், மேற்கு வங்கத்தில் பிரதமரின் கிசான் சம்மன் நிதி யோஜனாவை செயல்படுத்தவில்லை. இதனால் 70 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் அதன் நன்மையை இழந்துவிட்டனர்.” என்று பாஜக தலைவர் மால்டாவில் நடந்த ஒரு பேரணியில்கூறினார்.

“சுமார் 25 லட்சம் பேர் அரசை வலியுறுத்தியபோது, கிசான் சம்மன் நிதி யோஜனாவை நான் செயல்படுத்துவேன் என்று மம்தா ஜி கூறினார். மம்தா ஜி, தேர்தல்கள் நெருங்கிவிட்டன. ஏற்கனவே சேதம் ஏற்பட்ட நிலையில் மனம் திருந்துவதால் பயன் என்ன?” என அவர் கூறினார்.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர்களை கவர்ந்திழுக்கும் முயற்சியில், கட்சியின் ரத யாத்திரையை மேற்குவங்கத்தில் நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.

15’ஆம் நூற்றாண்டின் துறவி சைதன்யா மகாபிரபுவின் பிறப்பிடமான நாடியா மாவட்டத்தில் உள்ள நபாத்விப்பில் இருந்து பரிவர்த்தன் யாத்திரை என்றா பெயரில் இது தொடங்கும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட பாஜகவின் பல உயர்மட்ட தலைவர்கள் இந்த மாத இறுதியில் முன்மொழியப்பட்ட ஐந்து யாத்ராக்களை தொடங்கிவைக்க மாநிலத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிப்ரவரி 6 மற்றும் 11’க்கு இடையில் கூச்பிஹார், தெற்கு 24 பர்கானாக்களில் உள்ள கக்ட்விப், ஜார்கிராம் மற்றும் பிர்பூமில் உள்ள தாராபித் ஆகிய பகுதிகளில் இருந்து இதே போன்ற யாத்திரைகளை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. எனினும், யாத்திரை நடத்துவதற்கு முன்பு உள்ளூர் மாவட்ட நிர்வாகங்களிடம் அனுமதி பெறுமாறு மாநில அரசு பாஜகவிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

Views: - 0

0

0